ரோஹித் பெறும் வெற்றிகள் எல்லாம் அவருடையது அல்ல. அதற்கு காரணம் இவர்தான் – கெளதம் கம்பீர்

gambhir
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 4ஆம் தேதியன்று துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை சுவைத்த இந்தியா 1 – 0* என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

ashwin 2

- Advertisement -

இதை தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 12ஆம் தேதி பெங்களூருவில் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது. இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று 2 – 0 என்ற கணக்கில் மீண்டும் ஒரு வைட்வாஷ் வெற்றியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசால்ட்டாக வெற்றிபெறும் ரோஹித்:
முன்னதாக இந்த இலங்கை தொடர் முதல் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி தனது புதிய பயணத்தை துவங்கி உள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் முறையாக முழுநேர டி20 கேப்டனாக பொறுப்பேற்ற அவரிடம் கடந்த டிசம்பர் மாதம் ஒருநாள் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக இருந்த விராட் கோலி திடீரென பதவி விலகியதை அடுத்து தற்போது இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் ரோகித் சர்மா புதிய கேப்டனாக செயல்பட துவங்கி உள்ளார்.

Rohith

முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் இதுவரை நியூஸிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக 3 டி20 மற்றும் 1 ஒருநாள் தொடர்களில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத இந்தியா 12க்கு 12 போட்டிகளில் வெற்றி பெற்று வீரநடை போட்டு வருகிறது. மொத்தத்தில் இதுவரை சொந்த மண்ணில் கேப்டன்ஷிப் செய்த ரோகித் சர்மா அதில் ஒரு தோல்வியைக் கூட பெறாமல் புதிய கேப்டனாக அமர்க்களமாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

விராட் கோலி உருவாக்கிய இந்திய அணி:
குறிப்பாக அனுபவமே இல்லாத டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக பொறுப்பேற்றுள்ள அவர் 65 ஆண்டுகளுக்கு பின் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்த 2-வது இந்திய கேப்டன் என்ற மகத்தான சாதனை படைத்தார். இந்நிலையில் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மாவிற்கு எந்தவித சிரமங்களும் பிரச்சனையும் இருக்காது என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

rohith

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் செய்வது ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எனக்குத் தோன்றவில்லை. அவர் தலைமையில் புஜாரா மற்றும் ரகானே போன்ற வீரர்கள் இல்லை என்றாலும் கூட அவர்களுக்கு நிகரான ஹனுமா விஹாரி மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் போன்றவர்கள் உள்ளனர். இதில் ஷ்ரேயஸ் ஐயர் தனது டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் பிரகாசமாக தொடங்கியுள்ளார்”

- Advertisement -

“அஷ்வின், ஜடேஜா, ஷமி, பும்ரா, சிராஜ் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருக்கும் போது கேப்டனாக உங்களுக்கு எந்த சிரமமும் இருக்காது. ஏனெனில் பேட்ஸ்மேன்களால் போட்டியின் இலக்கை மட்டுமே எட்ட முடியும். ஆனால் பந்து வீச்சாளர்கள் தான் உங்களுக்கு போட்டியை வென்று கொடுப்பவர்கள். அந்த வகையில் இந்திய அணியின் பந்துவீச்சு துறையை மிகுந்த வளமுடன் கூடிய ஒன்றாக விராட் கோலி மாற்றியுள்ளார். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் செய்வது ரோஹித் சர்மாவுக்கு கடினமான வேலையாக இருக்கும் என எனக்கு தோன்றவில்லை. இந்தியாவில் டாஸ் வென்று பேட்டிங் செய்தால் வெற்றி எளிதாகக் கிடைக்கும். ஆனால் வெளிநாடுகளில் வெற்றி பெறுவது என்பது அங்கு உள்ள வித்தியாசமான கால சூழ் நிலைகளால் மிகவும் கடினமான ஒன்றாகும்” என கூறினார்.

Gambhir

டெஸ்ட் கிங் கேப்டன் கோலி:
அதாவது வெற்றிப் பெறுவதற்கு தேவையான அனைத்தையும் சமீபத்தில் விடைபெற்ற விராட் கோலி செய்துவிட்டதால் வரும் காலங்களில் இந்திய அணி வெற்றி பெறுவதில் ரோகித் சர்மாவுக்கு எந்த பெருமையும் இல்லை என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அவர் கூறியது போல கடந்த 2014ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற போது 7-வது இடத்தில் தத்தளித்த இந்தியாவை தனது அதிரடியான ஆக்ரோசம் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாக 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக விராட் கோலி ஜொலிக்க வைத்தார்.

மேலும் அவர் பொறுப்பேற்ற போது சுழல் பந்துவீச்சை மட்டுமே நம்பிக்கொண்டு பெரும்பாலும் சொந்த மண்ணில் மட்டும் வெற்றி பெறும் அணியாக இருந்த இந்தியாவை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக ஆதரவை கொடுத்து உலகின் எந்த ஒரு இடத்திலும் வெற்றி பெறும் அணியாக மாற்றிய பெருமையும் அவரையே சேரும்.

ind vs eng அதன் காரணமாகத்தான் சமீப காலங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் பல சரித்திர டெஸ்ட் வெற்றிகளை இந்தியா பதிவு செய்தது. எனவே கௌதம் கம்பீர் கூறுவது போல அனைத்து முக்கிய வேலைகளையும் விராட் கோலி செய்துவிட்டதால் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்வதில் கண்டிப்பாக எந்தவித சிரமமும் இருக்காது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

Advertisement