- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரிஷப் பண்டை டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது ஏன்? – கம்பீர் விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம் பெறவில்லை என்றாலும் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். அது மட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் அவரது சிறப்பான செயல்பாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியிலும் இருந்து வந்தார்.

துணை கேப்டன் பதவியை பறித்தது ஏன்? கமபீர் விளக்கம் :

இவ்வேளையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அவரது துணை கேப்டன் பறிக்கப்பட்டு கே.எல் ராகுலிடம் வழங்கப்பட்டது. இப்படி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்டை துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ஏன்? என்பது குறித்த கேள்விகளும் அதிகளவில் எழுந்தன.

- Advertisement -

இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி அளிக்கும் வகையில் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சில விளக்கங்களை அளித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ரிஷப் பண்டை பொறுத்தவரை அவர் எப்படி விளையாடுகிறாரோ, அப்படியே விளையாட வேண்டும் என்று தான் நாங்கள் நினைக்கிறோம். அவரது ஆட்டத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வேண்டாம்.

ஆனால் சர்வதேச போட்டிகளை பொருந்தவரை சூழலை புரிந்து கொண்டு ஆடுவது முக்கியம். அந்த வகையில் எந்தெந்த ஷாட்டுகளை விளையாடப்போகிறோம் என்று புரிதலை ரிஷப் பண்ட் கொண்டிருக்க வேண்டும். அது மட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் அவரது கேப்டன்சியை நாங்கள் பறித்ததற்கு காரணம் யாதெனில் : அவர் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி, கிர்மானி ஆகியோருக்கு அடுத்து 3 ஆவது வீரராக ரிஷப் பண்ட் நிகழ்த்தப்போகும் சாதனை – விவரம் இதோ

டெஸ்ட் போட்டிகளில் விளையாட வரும் அனைவருமே ஆரம்பத்தில் கேப்டன்சி மற்றும் துணை கேப்டன்சி ஆகியவற்றை குறித்து யோசிப்பது கிடையாது. அணியின் வெற்றிக்காக பங்களிப்பை வழங்க வேண்டும். அது மட்டும் தான் வீரர்களின் நோக்கமாக இருக்க வேண்டும் என ரிஷப் பண்டின் பதவி நீக்கம் குறித்து கௌதம் கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -