ராயுடு ஓய்வை அறிவிக்க இவர்களே முக்கிய காரணம் – கம்பீர் பாய்ச்சல்

Rayudu
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அதன்பிறகு தற்போது இன்று இந்திய அணியை சேர்ந்த அம்பத்தி ராயுடு தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ராயுடு இதுவரை 55 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 1694 ரன்களும், 6 டி20 போட்டியில் பங்கேற்று 42 ரன்களும் இந்திய அணிக்காக அடித்துள்ளார். 33 வயதான அம்பத்தி ராயுடு இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தேர்வு ஆவார் என்று நம்பிக் கொண்டிருந்தார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக அவருக்கு பதிலாக விஜய் சங்கர் இந்திய அணியில் தேர்வானார். இதன் காரணமாக விரக்தி அடைந்த ராயுடு விஜய் சங்கரரை மறைமுகமாக தாக்கிப் பேசி இருந்தார். இதனையடுத்து இந்த தொடரில் தவான் மற்றும் விஜய்சங்கர் காயம் அடைந்த போதும் ராயுடு அணியில் அழைக்கப்படவில்லை.

Ambati-Rayudu

இந்த விரக்தியின் காரணமாக அம்பத்தி ராயுடு ஏமாற்றத்தில் உச்சத்திற்கு சென்றதால் அவர் இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் என்று அறிவித்தார். இருப்பினும் இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் போட்டிகளில் அவர் தொடர்ந்து பங்கேற்பார் என்று தெரிகிறது. தற்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

IPL 2018 - SRH vs CSK

இந்நிலையில் ராயுடுவின் ஓய்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : ராயுடுவை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யாதது வியப்பளிக்கிறது. அவரின் இந்த திடீர் ஓய்வுக்கான காரணம் இந்திய அணியின் தேர்வுக் குழுவில் உள்ள உறுப்பினர்களே. அவரை அணியில் தேர்வு செய்யாமல் அவரை ஏமாற்றியது இந்த திடீர் ஓய்வு முடிவுக்கு காரணம் என்று நான் நினைக்கிறன்.

Rayudu

தற்போது தேர்வுக்கு உள்ள ஐந்து பேர் சேர்த்து அடித்து ரன்களை ராயுடு தனியாக அடித்துள்ளார். அகர்வால், பண்ட் போன்ற புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் போது அவர்களிடம் சற்று அனுபவம் மிக்க ராயுடுவை ஏன் அணியில் சேர்க்க வில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ராயுடுவின் இந்த திடீர் ஓய்விற்காக தான் வருத்தப்படுவதாகவும் அந்த பேட்டியில் கமபீர் கூறியது குறிப்பிடத்தக்கது

Advertisement