Worldcup : 2007- ல் எனக்கு நடந்தது தற்போது 2019-ல் ராயுடுவிற்கு நடந்துள்ளது – கம்பீர் வருத்தம்

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Gambhir
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Team-1

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்த அணியில் கோலி கேட்டன் மற்றும் ரோஹித் துணைகேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இதோ : 1. கோலி 2. ரோஹித் 3. தவான் 4. ராகுல் 5. ஜாதவ் 6. தோனி 7. ஹார்டிக் பாண்டியா 8. விஜய் ஷங்கர் 9. தினேஷ் கார்த்திக் 10. பும்ரா 11. புவனேஷ்குமார் 12. ஷமி 13. குல்தீப் யாதவ் 14. சாஹல் 15. ஜடேஜா

இந்நிலையில் இந்திய அணியில் ராயுடு தேர்வாகாதது குறித்து முன்னாள் வீரரான கம்பீர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : ராயுடு ஒருநாள் போட்டிகளில் 48 ரன்கள் சராசரி வைத்திருந்தும் அணிக்கு தேர்வாகாதது வருத்தம் அளிக்கிறது. ஏனெனில் பண்ட் இளம் வீரர் அவருக்கு இந்த உலகக்கோப்பை அணியில் இடம்கிடைக்க வில்லை என்றாலும் வரும் காலத்தில் அவர் இந்திய அணியில் இடம்பிடிக்க நிறைய வாய்ப்புள்ளது.

- Advertisement -

ambathirayudu1

ஆனால், 33 வயதாகும் ராயுடு அவருக்கு இதுவே கடைசி உலகக்கோப்பை தொடராகும். எனவே அவருக்கு இந்த தேர்வு மிகவும் மனஉளைச்சலை தரும். இதேபோன்று நான் 2007 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் நன்றாக விளையாடியும் அணிக்கு தேர்வாகவில்லை அந்த வருடம் நாம் மிகவும் கஷ்டப்பட்டேன். அதனப்பிறகு மீண்டும் என்னை நிரூபித்து அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு மற்றும் காலம் இருந்தது.

rayudu

அதனால் மீண்டும் தொடர்ந்து நன்றாக விளையாடி 2011 உலகக்கோப்பை வெற்றி அணியில் இடம்பிடித்தேன். ஆனால், ராயுடுவிற்கு அதற்கு போதிய காலம் இல்லை எனவே நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் போதே அணியில் இருந்து நீக்கப்பட்டது அவருக்கும் சரி, எனக்கும் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று கம்பீர் கூறினார்.

Advertisement