MS Dhoni : ஒரே நாளில் அவரால் தோனி ஆகிவிட முடியாது. அவருக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள் – கம்பீர்

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி மூன்று

Gambhir
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி மூன்று வெற்றிகளையும், நியூசிலாந்துடனான மழையால் நின்ற போட்டியில் ஒரு டிரா என 7 புள்ளிகளில் உள்ளது.

india

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த போட்டி 22ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான கம்பீர் இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் கம்பீர் கூறியதாவது :

தவானுக்கு பதிலாக இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே பண்ட்டை தோனியுடன் ஒப்பிட்டு சிலர் விமர்சித்தனர். ஆனால் தோனி அனுபவம் வாய்ந்த வீரர் அவரைப் போன்ற அனுபவம் பண்டிற்கு வர இன்னும் நாட்கள் இருக்கிறது. பண்ட் சிறப்பான வீரர்தான் அவராலும் சிறந்த வீரராக மாறமுடியும்.

Pant

அவருக்கான போட்டிகள் அவரிடம் கிடைக்கும் பொழுது அவருடைய அனுபவம் அதிகம் ஆகும் எனவே அவருக்கு அழுத்தத்தை தராமல் அவருடைய இயல்பான ஆட்டத்தை அவரை விளையாட விட்டால் அவர் போட்டியில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார். எனவே அவரை அழுத்தம் கொடுக்காமல் இயல்பாக விளையாட வையுங்கள் என்று பண்ட் குறித்து கம்பீர் கூறினார்.

Advertisement