நீங்க செய்த தேர்வு சரியா ? உங்களால ஒரு உலககோப்பையே வீணா போச்சு. நேரலையில் பிரசாத்தை வெளுத்து வாங்கிய கம்பீர் – விவரம் இதோ

Prasad

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவராக இருந்த எம்எஸ்கே பிரசாத் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் முன்னாள் வீரர் தமிழகத்தின் ஸ்ரீகாந்த் ஆகிய மூவரும் நேரலை விவாதத்தில் கலந்து கொண்டனர் .இதில் எம்எஸ்கே பிரசாத் செய்த தேர்வு மற்றும் அதில் செய்த தவறு என்று பல விடயங்களை பற்றி பேசினார். கொரோனா ஓய்வு நேரத்தில் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் கம்பீரின் இந்த பேட்டி தற்போது வைரலாகியுள்ளது.

Prasad 1

முதலில் பேசிய கௌதம் கம்பீர் : தேர்வுக்குழு தலைவர் அணியை தேர்வு செய்யும்போது கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு உரிமை அளிக்கப்பட வேண்டும். மேலும், ஆடும் லெவனில் தேர்வு குழுவினர் தலையிடாமல் இருக்க வேண்டும். அதே நேரத்தில் பயிற்சியாளர் மற்றும் கேப்டனுக்கு அணி தேர்வில் ஒத்துழைக்கும் உரிமையும் கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த எம்எஸ்கே பிரசாத் : தேர்வு செய்யும்போது கேப்டன் எப்போதும் தனது கருத்தை தெரிவிப்பார். ஆனால் நமது விதிகளின்படி எவ்வித ஓட்டும் கிடையாது என்று பதிலளித்தார். கௌதம் கம்பீர் பேசுகையில் : தேர்வுக்குழுவினர் தேர்வு செய்த பல வீரர்கள் கிரிக்கெட் வாழ்க்கை காணாமல் போய்விட்டது. அவர்களின் தேர்வு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. உலக கோப்பை தொடருக்கான அம்பத்தி ராயுடு இரண்டு வருடங்களாக தயார் செய்யப்பட்டார்.

Rayudu

ஆனால் திடீரென விஜய்சங்கர் அணியில் தேர்வு செய்யப்பட்டு உலக கோப்பை தொடருக்கு அனுப்பிவைக்கப்பட்டார். உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக 3டி வீரர் உங்களுக்கு தேவைப்படவில்லையா ? அதற்கு நீங்கள் அளித்த விளக்கமும் சரியானதா என்றும், உலகக்கோப்பை தொடரில் உங்களது தேர்வு சரியானதா ? என்றும் அடுத்தடுத்து தனது கேள்விகளை அடுக்கினார்.

- Advertisement -

இதற்கு பதிலளித்த எம்எஸ்கே பிரசாத் தடுமாற்றத்துடன் கூறினார் : நான் இதற்கு விளக்கம் அளிக்கிறேன். இந்திய டாப் ஆர்டர் வீரர்கள் ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பந்துவீச மாட்டார்கள். அந்த இடத்தில் விஜய் சங்கர் இருந்தால் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்வது மட்டுமின்றி பின்வரிசையில் பந்து வீசுவார். அவர் ஒரு ஆல்ரவுண்டராகவே அணியில் சேர்க்கப்பட்டார். மேலும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் விஜய் ஷங்கர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சினை செய்வார் என்றே நாங்கள் அவரை தேர்வு செய்தோம்.

Vijay-Shankar

இதற்கிடையில் பேசிய ஸ்ரீகாந்த் : கௌதம் கம்பீருக்கு ஆதரவாகவோ எம்எஸ்கே பிரசாதுக்கு ஆதரவாகவவோ நான் பேசவில்லை. ஆனால் உள்ளூர் கிரிக்கெட் இருக்கும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு நிறைய வித்தியாசம் உள்ளது என்று கூறினார். பின்னர் பதிலளித்த கௌதம் கம்பீர் : தேர்வுக் குழுவில் இடம் பெறுபவர்கள் நல்ல அனுபவம் வாய்ந்த வீரர்களாக இருக்க வேண்டும்.

சர்வதேச கிரிக்கெட்டை பற்றி அதிகம் தெரிந்திருக்க வேண்டும். அதிகமாக போட்டிகளில் விளையாடினால் தான் வீரர்களை பற்றி அதிகமாக தெரியும் .என்று எம்எஸ்கே பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுத்தார். இந்த விவாதம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.