கெயில், டிவில்லியர்ஸை விட விராட் கோலியே சிறந்தவர். அதற்கான காரணம் இதுதான் – கம்பீர் ஓபன் டாக்

Gambhir
- Advertisement -

கிரிக்கெட் உலகில் தற்போது மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் பலர் இருந்தாலும் அந்த பேட்ஸ்மேன்களில் எல்லாம் நேர்த்தியான ஒரு வீரர் விராட் கோலி தான் என்று பல விமர்சகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகின்றனர். இதற்கு அவரது உடற்கட்டு, கிரிக்கெட்டை நேசிக்கும் விதம், அவரது பாணி, அவரரத்து ஷாட்களின் நேர்த்தி என அனைத்தையும் காரணமாக கூறுவர்.

Kohli 3

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலி ஏன் மிகச்சிறந்த ஆட்டக்காரராக இருக்கிறார் என்பது பற்றி பேசியுள்ளார் கௌதம் கம்பீர். மேலும் கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் இருக்கும் போதும் அவர்களை விட விராட் கோலி சிறந்த வீரராக இருக்கிறார் என்பது பற்றியும் பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்

ரோகித் சர்மா மிகப்பெரிய ஷாட்கள் ஆடுவதில் வல்லவர். இதனை வைத்துதான் அவர் எத்தனை அபார சதங்களை அடித்தார் . அதேபோல் கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகிய இருவருமே அதிரடியாக ஆடுவதில் வல்லவர்கள்

Kohli

இவர்கள் மூவரையும் தாண்டி விராட் கோலியுயிடம் ஒரு அதீத திறமை இருக்கிறது. அதாவது ஒவ்வொரு பந்திற்கும் சிங்கிள் ரன் அடிப்பதில் அவர் வல்லவர். இதுதான் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் . இந்த திறமையை வைத்துதான் இவ்வளவு ரன்கள் அடித்துள்ளார் விராட் கோலி. இதன் மூலமாகத்தான் தற்காலத்தில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்திருக்கிறார் என்று புகழாரம் சூட்டியுள்ளார் கவுதம் கம்பீர்.

Kohli-2

விராட் கோலி தற்போது வரை 73 சதங்களும் கிட்டத்தட்ட சர்வதேச அளவில் 22,000 ரன்களையும் குவித்துள்ளார். கூடிய சீக்கிரத்தில் சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை முறியடிக்க இவருக்கு வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement