ரன் அடிச்சதெல்லாம் சரி. இன்னும் இந்த ஒரு விஷயத்துல கோலி எதுவும் பண்ணல -கோலியை வம்புக்கு இழுத்த கம்பீர்

Gambhir
- Advertisement -

இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் அணியின் கேப்டனாகவும், 2017 ஆம் ஆண்டு ஒருநாள் அணியின் கேப்டனாகவும் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற முதல் இந்திய அணி அனைத்து விதமான போட்டிகளிலும் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இவரது தலைமையில் ஐ.சி.சி நடத்தும் கோப்பைகளை கைப்பற்றவில்லை என்றாலும் மற்ற தொடர்களை கைப்பற்றி இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.

Kohli-1

இதுவரை கோலி ஒரு கேப்டனாக அணியை மிகச் சரியாக வழி நடத்தி வருகிறார். இவரது காலகட்டத்தில்தான் இந்திய அணி டெஸ்ட் டி20 மற்றும் ஒருநாள் என அனைத்துவிதமான போட்டிகளிலும் தரவரிசை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும், ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்கும் சென்றது. வெளிநாடுகளில் அசத்தலாக பல வெற்றிகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கோலியின் கேப்டன்சி பற்றி விமர்சித்துப் பேசியுள்ளார் கௌவுதம் கம்பிர். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Gambhir

கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. ஒரு தனி வீரராக நீங்கள் எத்தனை சாதனை வேண்டுமானாலும் செய்யலாம். பல ஆயிரம் ரன்களை குவிக்கலாம். லாராவை போல ஏகப்பட்ட ரன்களையும் குவிக்கலாம். ஜாக் காலிஸ் போல ரன்களைக் குவித்துவிட்டு கோப்பையை வெல்லாமலும் இருக்கலாம்.

- Advertisement -

அதே போல்தான் விராட் கோலியும். ஒரு கேப்டனாக அவர் எதையும் ஜெயிக்கவில்லை.. அவர் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது என்று பேசியுள்ளார் கௌதம் கம்பீர். ஏற்கனவே 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கௌதம் கம்பீருக்கும் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலிக்கும் ஆடுகளத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Kohli

கௌதம் கம்பீர் ஆடுகளத்தில் வேண்டுமென்றே வீரர்களை சீண்டுவது கெட்டிக்காரர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளம் மூலம் கம்பீர் கோலியை சீண்டியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ளாத கோலியின் தீவிர விசிறிகள் அவரை வசைபாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement