இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் நாளை தொடங்க இருக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் ஆஸ்திரேலிய அணியின் கையே ஓங்கியுள்ளது என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது யாதெனில் பந்து வீச்சுதான்.
முன்னணி பந்துவீச்சாளர்கள் பலர் இருந்தும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அவர்களுக்கு எதிராக எளிதாக ரன்களை குவித்து விடுகின்றனர். மேலும் அணியில் ஆறாவது பந்துவீச்சாளர் இந்திய அணியில் இல்லாததும் பெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரும் ஆறாவது பந்துவீச்சாளர் இடம் பெறாதது குறித்து சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் ஆறாவது பவுலர் இடம்பெறாதது ஏன் மேலும் ஹார்டிக் பாண்டியா பந்து வீச முடியவில்லை என்றால் அவருக்கு பதிலாக மாற்று வீரர் இல்லையா ? என்பது போன்ற கேள்விகளை முன்வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : ஹர்திக் பாண்டியா பந்து வீச முடியவில்லை என்றால் வேறு ஒரு பகுதி நேர பந்து வீச்சாளர் அணியில் இல்லையா ? அப்படிப்பட்ட வீரரை ஏன் சேர்க்கவில்லை ? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் மணிஷ் பாண்டே போன்ற வீரர்களை வைத்து இந்த பிரச்சனையே சில நாட்களுக்கு ஈடு செய்யலாம். ஆனால் ரோஹித் போன்ற வீரர் மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பெறும் போது இப்பிரச்சினை முழுவதுமாக தீர்ந்து விடும் என்றே நினைக்கிறேன். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது யாரெனில் முதல் 6 பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட பந்துவீச முடியாத நிலையில் உள்ளனர். இதனை தவிர்க்க வேண்டியது அவசியம் ஏனெனில் பகுதி நேர பந்து வீச்சாளர் அணியில் இருக்கும் போது அது அணிக்கு சாதகமாக அமையும்.
ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல், சீன் அபாட் மற்றும் ஹென்ரிக்ஸ் போன்ற ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். ஆனால் இந்திய அணியில் பொருத்தமட்டில் ஹார்திக் பாண்டியா மட்டுமே ஆல்-ரவுண்டராக உள்ளார். மேலும் பகுதி நேரத்திலும் யாரும் பந்துவீச முற்படவில்லை. பாண்டியாவின் இடத்தில் விஜய் ஷங்கரை இறக்கினால் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பது சந்தேகம்தான். எனவே இந்திய அணி 6வது பவுலர் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
முன்பெல்லாம் இந்திய அணியில் சச்சின், யுவராஜ், சேவாக், கங்குலி ஆகியோர் பகுதிநேர பந்துவீச்சாளர்களாக 2-3 ஓவர்கள் வீசும் திறனுடன் பந்துவீசி வந்தார்கள். இதனால் 4 பவுலர் ஒரு ஆல்ரவுண்டர் என சிறப்பாக விளையாட முடிந்தது. ஆனால் இப்போது உள்ள இந்திய அணியை பார்க்கும் போது முதல் ஆறு பேருக்கு பந்துவீச வராது இந்த விடயம் அணியின் சமநிலை பாதிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.