உங்க இஷ்டத்துக்கு நீங்க நடக்காதீங்க. உங்களுக்கு உரிமை இல்லை – தோனியை வெளுத்து வாங்கிய கம்பீர்

Gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி உலகக்கோப்பைக்கு பின்பு ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இன்று வரை ஓய்வு பற்றிய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய தோனிக்கு தற்போது நடைபெறும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர வாய்ப்பு கிடைக்கவில்லை.

Dhoni 1

- Advertisement -

இந்நிலையில் அடுத்ததாக நடைபெறவுள்ள வங்கதேச தொடரிலும் தோனி ஓய்வு எடுக்க விரும்புவதாகவும், அதனைத் தொடர்ந்து வரும் தொடர்களில் பங்கேற்க இருப்பதாகவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் தோனியின் இந்த செயல்பாடு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

தோனி ஒரு தொடரில் இருந்து ஓய்வு காரணமாக விலகியது தவறு கிடையாது. ஆனால் எந்த தொடரில் விளையாட வேண்டும் எந்த தொடரில் விளையாட கூடாது என்று தோனி முடிவு செய்ய யார் அவருக்கு உரிமை அளித்தது. ஒரு வீரர் விளையாட வேண்டுமா அல்லது அவர்களுக்கு ஓய்வு கொடுக்கலாமா என்று பயிற்சியாளர் மற்றும் கேப்டனே முடிவு செய்ய வேண்டும். ஆனால் டோனியின் விடயத்தில் இது தலைகீழாக உள்ளது.

dhoni

அவரே விளையாடும் தொடர்களை தேர்ந்தெடுத்து கொள்கிறார். விளையாட வேண்டாம் என்றால் ஓய்வு கேட்கிறார் அவரின் இந்த முடிவு தவறான விடயமாகும் இதை ஆதரிக்க கூடாது. ஒன்று தொடர்ந்து விளையாடவேண்டுயம் இல்லையென்றால் தோனியின் ஓய்வு முடிவு குறித்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அவரிடம் தெளிவாக பேச வேண்டும் என்றும் காட்டமாக கம்பீர் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement