முதன்முறையா தோனியை பார்க்கும்போதே அவரிடம் இருந்த அந்த திறமையை நான் பார்த்தேன் – மனம்திறந்த கம்பீர்

Gambhir
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக, ஒரு பேட்ஸ்மேனாக, ஒரு விக்கெட் கீப்பராக, பினிஷராக பல ரோல்களில் சிறப்பாக விளையாடிய வீரர் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியை கூறலாம். அந்த அளவிற்கு அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்தி கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு சிறப்பான பங்கை கொடுத்தவர். கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அதிரடியான ஓய்வை அறிவித்தார். அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் தொடர்பான செய்திகளுக்கும், பேச்சுகளுக்கும் இப்பொழுதும் குறையில்லை. அந்த அளவிற்கு அவரது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Dhoni

- Advertisement -

மேலும் ஆஸ்திரேலிய தொடரின் போது கூட தோனியை மிஸ் செய்கிறேன் என பல ரசிகர்கள் பேனர் காட்டியதையும், கோலி தானும் தோனியை மிஸ் செய்கிறேன் என்பது போல கூறியதும் இணையத்தில் வைரலாகியது அதனைத் தொடர்ந்து தோனியின் அளவிற்கு என்னிடம் வேகம் இல்லை என்று தவானிடம் ஸ்டம்பிங் செய்துவிட்டு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் டோனியின் பெயரை உச்சரித்தது நாம் அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் தற்போது தோனி கிரிக்கெட்டில் கால் பதித்து 16 வருடங்கள் கடந்த நிலையில் அவர் குறித்த செய்திகள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது வேறு எந்த வீரரிடமும் இல்லாத ஒரு ஸ்பெஷல் தோனியிடம் இருந்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பிரபல தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது : தோனியை முதல் முறை பார்க்கும்போது அவர் ஒரு ஸ்பெஷலான வீரர் என்பது எனக்கு தெரிந்தது.

நாங்கள் இந்திய ஏ அணிக்காக கென்யா ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு சென்று விளையாடினோம். அப்போது 3 நாடுகள் கொண்ட கிரிக்கெட் தொடரை விளையாடும் போது தற்போது தோனியை நாம் எவ்வாறு பார்த்தோமோ அதே போன்றே நாலாபுறமும் பந்துகளை பறக்கவிட்டார். இந்திய அணியில் விக்கெட் கீப்பர்கள் பலர் இருந்துள்ளனர். ஆனால் தோனியை போல 100 மீட்டர் சிக்ஸர் பறக்க விடும் அதிரடி பேட்ஸ்மேன்களில் யாரும் இல்லை. அது அவருடைய தனித்துவமான திறமை அதனை வைத்தே அவர் சாதித்தார் என்று தெரிவித்தார்.

Gambhir-1

2004 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். ஆனால் அவருக்கு முன்னதாக 2003ஆம் ஆண்டு கம்பீர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். இவர்கள் இருவரும் இணைந்து பல போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளனர். குறிப்பாக 2011ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் கம்பீர் மற்றும் தோனியும் சேர்ந்து 109 ரன்கள் கூட்டணி அமைத்தது வெற்றிக்குப் பெரிதும் உதவியது என்று கூறினால் அது மிகையல்ல.

Advertisement