இந்த ஒரு செயல் போதும் தோனி ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தூண்டுகோலாக அமைந்துவிட்டார் – கம்பீர் பேட்டி

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற அனுமதி கேட்டிருந்தார். இந்த அனுமதியினை இந்திய ராணுவம் தோனிக்கு அளித்தது.

Dhoni1

- Advertisement -

அதனைத் தொடர்ந்து இரண்டு மாத பயிற்சி காலத்தில் இணைந்து தோனி அடுத்த 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தோனி தனது பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் தோனி குறித்து தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : ராணுவத்தில் இணைவது என்று முடிவு செய்தது சிறப்பான ஒன்றாகும். உண்மையில் அவர் ராணுவ சீருடையை அணிய விரும்பினால் அவர் இந்திய ராணுவத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று பலமுறை அவரிடம் தெரிவித்திருக்கிறேன். அதனை தற்போது அவர் செய்து கொண்டிருக்கிறார்.

Dhoni 1

அவரின் இந்த முடிவு மூலம் தோனி தனது நாட்டின் மீது வைத்திருக்கும் அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளார். அவரது இந்த செயல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் ராணுவத்தில் சேர நினைக்கும் இளைஞர்களுக்கும் தூண்டுகோலாக இது அமையும் என்று கம்பீர் கூறினார். உலகக்கோப்பை தொடரின் போது கம்பீர் தோனியின் ஆட்டம் குறித்து விமர்சித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement