- Advertisement -
ஐ.பி.எல்

ஏலத்திற்கு முன்னாடி இலங்கை தொடர் மட்டும் நடந்து இருந்தா. அவரு பல கோடிக்கு போயிருப்பாரு – கம்பீர் ஓபன்டாக்

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள 2023-வது ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் மினி ஏலமானது கடந்த டிசம்பர் மாதம் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் நடைபெற்று முடிந்தது. இந்த மினி ஏலத்தில் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்து ஏலத்தில் பங்கேற்றனர். ஆனால் 900-திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஏலத்தில் 80-க்கு மேற்பட்ட வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த மினி ஏலத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆல்ரவுண்டர்கள் அதிக விலைக்கு ஏலம் போகினர். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து வீரர்கள் சாம் கரண், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் போன்றோர் பல கோடிகளுக்கு விலைக்கு சென்றனர்.

- Advertisement -

ஆனால் இலங்கை அணியின் கேப்டனும், ஆல்ரவுண்டருமான தசுன் ஷனகா 50 லட்சத்திற்கு தனது பெயரை பதிவு செய்திருந்தாலும் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முடிவடைந்த பின்னர் தற்போது பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் கூறுகையில் :

நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் மட்டும் ஐபிஎல் ஏலத்திற்கு முன்பே நடைபெற்று முடிந்திருந்தால் தசுன் ஷனக்காவை எடுக்க அனைத்து அணிகளுமே போட்டி போட்டு இருக்கும். அதோடு அவர் பல கோடிகளுக்கு ஏலம் போயிருப்பார். அந்த அளவிற்கு அவர் இந்த டி20 தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஜஸ்ப்ரீத் பும்ரா அணியில் இருந்து தீடீரென நீக்கப்பட்டதுக்கு இதுதான் காரணமா இருக்குமோ – இதை கவனிச்சீங்களா

நிச்சயம் அவரை அனைத்து அணிகள் மட்டுமின்றி லக்னோ அணியாகிய நாங்களும் தவற விட்டு உள்ளோம் என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார். இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் பேட்டிங்கில் அசத்தலாக செயல்பட்ட தசுன் ஷனகா பந்துவீச்சிலும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by