நீங்க ஒன்னும் சேவாக் இல்ல. உங்க ஸ்டைல்ல கொஞ்சம் கவனமாக விளையாடுங்க – இளம் வீரருக்கு கம்பீர் அட்வைஸ்

Gambhir
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று வெலிங்டன் மைதானத்தில் துவங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை குவித்துள்ளது. ரஹானே 38 ரன்களுடனும், பண்ட் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Ind-1

- Advertisement -

இந்த போட்டியில் இளம் வீரர்களான மயங்க் அகர்வால் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அகர்வால் சற்று சமாளித்து விளையாடி 34 ரன்கள் குவித்தார். ப்ரித்வி ஷா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இந்நிலையில் இந்த இருவரை பற்றியும் பேசிய கௌதம் கம்பீர் துவக்க வீரர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார் இதுகுறித்து அவர் கூறியதாவது..

இந்தியாவின் துவக்க வீரராக களமிறங்கும் மயங்க் அகர்வால் நல்ல வீரர்தான். ஆனால் அவருக்கு சேவாக் போன்றோ டேவிட் வார்னர் போன்றோ தனித்திறமை கிடையாது. அவர் ஒரு தனி நிதான பாணியில் ஆட்டத்தை எதிர்கொள்ளும் திறனை அவர் பெற்றிருக்கிறார். அதற்கு ஏற்ப ஆடுவதுதான் அவருக்கு சிறந்த வழி. மேலும் முதல் தர போட்டிகளை தொடர்ந்து தற்போது சர்வதேச போட்டிகளிலும் கவனம் ஈர்த்து வருகிறார்.

Agarwal-2

பிரித்திவ் ஷா சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி ஆரம்ப கால முதல்தர போட்டிகளிலும் துவக்க வீரராகவே விளையாடினார். அதனால் துவக்கத்தில் ஆடுவதுதான் அவருக்கு சரியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் கௌதம் கம்பீர்.

Advertisement