உலகக்கோப்பையை வெல்ல தோனி அடித்த இந்த சிக்ஸர் தான் காரணமா ? – நேரடியாக தாக்கி பேசிய கம்பீர்

Gambhir
- Advertisement -

இந்திய அணி கடந்த 2011-ம் ஆண்டு இதே நாளில்தான் 28 ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாக 50 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. மும்பையில் நடைபெற்ற அந்த இறுதிப் போட்டியில் இலங்கை அணியை அபாரமாக சேஸிங் செய்து வீழ்த்தி இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இந்த போட்டியில் வெற்றிக்கான இலக்கினை சிக்சர் மூலம் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார் கேப்டன் தோனி. அந்த வெற்றிக்குப் பிறகு அந்த சிக்ஸரும் அதற்கு செய்யப்பட்ட வர்ணனையும் தான் இன்றளவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

Dhoni

- Advertisement -

மேலும் கடந்த ஆண்டு வெளியான ஒரு இணையதள கட்டுரையில் “இந்தியா கோப்பையை கைப்பற்ற காரணமான சிக்ஸர்” என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியாகியிருந்தது. அதற்கு அப்போதே கம்பீர் ட்விட்டர் மூலம் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருந்தார். இந்நிலையில் தற்போது அந்த விமர்சனம் தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை நேர்காணல் ஒன்றினை கம்பீரிடம் கண்டது. அதில் உலகக் கோப்பை இறுதி ஆட்டம் குறித்து அதில் பேசிய கம்பீர் :

தனி ஒருவர் தான் உலக கோப்பையை நமக்கு பெற்றுக் கொடுத்தார் என்று எண்ணுகிறீர்களா ? அது சாத்தியம் அல்ல. ஏனெனில் இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த அனைத்து வீரர்களின் ஒட்டுமொத்த உழைப்பால் கிடைத்த வெற்றி அது. கோப்பையை வென்றதற்கு அனைவரும் காரணம் தானே.. ஆனால் ஒரே ஒருவரை மட்டும் கொண்டாடுவது வாடிக்கை ஆகிவிட்டது. எனக்கு அதில் ஒரு துளி கூட நம்பிக்கை இல்லை.

Gambhir

உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அனைத்து வீரர்களின் பங்களிப்பும் அதில் இருந்தது. ஜாஹீர் கானின் அற்புதமான பந்துவீச்சை மறந்துவிட முடியுமா ? இறுதிப் போட்டியின் முதல் 5 ஓவர்களில் 3 மெய்டன் ஓவர்கள் வீசி 6 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். அதேபோன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக யுவராஜின் ஆட்டத்தை புறந்தள்ளி விட முடியுமா ? தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சச்சின் ஆட்டத்தை புறந்தள்ளி விட முடியுமா ? ஆனால் நாம் பேசிக்கொண்டிருப்பது இறுதியில் அடிக்கப்பட்ட அந்த சிக்சர் ஒன்றுதான்.

- Advertisement -

சிக்சர் அடித்தால் உலக கோப்பையை விடலாம் என்றால் யுவராஜ் எல்லாம் 6 உலக கோப்பையை வென்று கொடுத்திருப்பார். 2007ஆம் ஆண்டு டி20 உலககோப்பை 6 சிக்சர்கள் அடித்த அவர் மேலும் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தொடர் நாயகனும் அவர்தான். ஆனால் இவர்களையெல்லாம் நாம் பாராட்ட தவறி விட்டோம். இன்னும் எத்தனை நாட்கள் தான் சிக்ஸர் குறித்து பேசுவோம் என கம்பீர் தனது ஆதங்கத்தை நேரடியாக கூறியுள்ளார்.

Gambhir-1

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் 275 ரன்கள் என்ற இலக்கை செய்த இந்திய அணி சச்சின் மற்றும் சேவாக் அடுத்தடுத்து ஆட்டமிழக்க துவக்கம் முதலே இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்தவர் தம்பிதான் இறுதிவரை இலக்கிற்கு அழைத்துச் சென்றவர் 97 ரன்கள் எடுத்த நிலையில் அதிர்ஷ்டம் வழியின்றி ஆட்டமிழந்து வெளியேறினார் இல்லையெனில் அவர் சதம் அடித்து இருக்கும் வாய்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement