அவர் சொன்னதில் என்ன தப்பு. அவர் சரியாதான் சொல்லி இருக்கிறார். கவாஸ்கருக்கு நோஸ் கட் கொடுத்த கம்பீர்

Gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரை வெற்றிகரமாக முடித்துள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மேலும் இரண்டாவதாக நடைபெற்ற பகலிரவு ஆட்டத்தில் இந்திய அணியின் ஆட்டம் வெகு சிறப்பாக இருந்தது என்று அனைவரும் பாராட்டி இருந்தனர்.

Ganguly 1

- Advertisement -

மேலும் இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி சவுரவ் கங்குலி வெகுவாக புகழ்ந்தார். மேலும் கங்குலியின் தலைமையின் கீழ்தான் இந்திய அணி பலம் பெற்றதாகவும் வெற்றிகளைத் தொடர்ந்து குறித்து வந்ததாகவும் அதனையே தங்களது அணி பின்பற்றி வருகிறது என்றும் கோலி கூறி கங்குலியின் புகழ் பாடினார்.

இந்நிலையில் கோலி இவ்வாறு கங்குலி குறித்து இவ்வளவு அதிகமாக புகழ்ந்து இருந்ததை கவாஸ்கர் கடுமையாக சாடினார். மேலும் கங்குலி தலைமையில் மட்டும் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை. 1970 – 80 களிலேயே நாங்கள் இந்திய அணியை சிறப்பாக கொண்டு வந்தோம் அப்போதே இந்திய அணி வெற்றிகளை குவித்து வந்தது. அப்போது கோலி பிறந்திருக்க மாட்டார் என்று காட்டமாக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.

Gambhir

இந்நிலையில் கவாஸ்கரின் இந்த கருத்தை ஆமோதிக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் கம்பீர் கூறியதாவது : கோலி கூறியதில் எந்த தவறும் இல்லை. இந்திய அணியின் வெற்றிக்கு கங்குலி தலைமையிலான அணி மிகவும் முக்கிய பங்கு வகித்தது மேலும் கங்குலி தலைமையிலான இந்திய அணி வெளிநாட்டு தொடர்களில் அதிக அளவு வெற்றியை பெற்றது. எனவே கோலி கூறியதில் எந்த தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்று கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement