தோனியும் மனிதர் தானே. அவருக்கு இந்த நிலைமை ஏற்படும் ஆனாலும் உண்மையிலேயே அவர் கேப்டன் கூல்தான் – மனம்திறந்த கம்பீர்

Gambhir
- Advertisement -

சமூக வலைதளங்களில் சமீபகாலமாகவே தோனி குறித்த செய்திகள் நிறைய வலம் வருகின்றன. அதிலும் குறிப்பாக தோனியுடன் நடந்த அனுபவங்கள் குறித்து பல்வேறு கிரிக்கெட் வீரரும் வீரர்களும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். மேலும் கிரிக்கெட் குறித்து எந்த செய்தி வெளியானாலும் அதில் தோனி குறித்த ஒரு கேள்வியாவது கேட்கப்பட்டுவிடுகிறது.

Dhoni

- Advertisement -

செய்தியாளர்கள் மட்டுமின்றி கேள்வியை தொகுப்பவர்கள் மற்றும் சமூக வலைதளம் என அனைத்திலும் பேட்டி எடுப்பவர் தோனி குறித்த ஒரு கேள்வியினை கேட்டு விடுகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனியை அனைவரும் கேப்டன் கூல் என்று அழைக்கின்றனர். அந்த அளவிற்கு அவர் நெருக்கடியான நேரத்தில் தனது பொறுமையை இழக்காமல் சிறப்பாக கையாள்வதால் அவருக்கு அந்த பெயரை ரசிகர்கள் சூட்டியுள்ளனர்.

மேலும் சக வீரர்களின் கடுமையாகப் பேச மாட்டார், யாரிடமும் தனது உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார், மைதானத்தில் போட்டியின்போது கோபப்பட மாட்டார் என்று பல நற்பண்புகள் அவரிடம் உள்ளன. ஆனால் சில நேரங்களில் அவரையும் மீறி அவர் உணர்ச்சி வசப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் மற்ற கேப்டன்களை விட இவர் மிகவும் கூல்தான்.

Gambhir

இந்நிலையில் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தோனி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தோனி பொதுவாகவே கோபப்பட மாட்டார் என மக்கள் சொல்வார்கள். ஆனால் அவர் கோபப்பட்டு நான் இரண்டு முறை பார்த்திருக்கிறேன். 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் போது சில நேரங்களில் நாங்கள் சிறப்பாக விளையாடாத போது தோனி கோபப்பட்டிருக்கிறார்.

Gambhir-1

அவரும் மனிதர்தானே அவருக்கும் கோபம் வருவது நியாயம்தான். அதற்கு அவருக்கு முழு உரிமை இருக்கிறது. ஐபிஎல் போட்டியை கூட பீல்டிங் சரியாக செய்யாததால் வீரர்களின் மீது கோபப்படுகிறார் அதை நீங்கள் பார்த்திருக்க முடியும் என்று கம்பீர் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய கம்பீர் ஆனாலும் இதேபோல் உலகில் உள்ள மற்ற கேப்டன்களை ஒப்பிட்டுப் பார்த்தால் தோனி மிகவும் நிதானமாக கேப்டன் என்று கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement