ஹர்டிக் பாண்டியாவின் இடத்தை இந்த தமிழக வீரரால் நிரப்ப முடியாது – வெளிப்படையாக கூறிய கம்பீர்

Gambhir
Advertisement

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடி 350 ரன்களுக்கு மேல் குவித்து. இதன் காரணமாக இந்திய பேட்ஸ்மேன்கள் இந்த இலக்கை எட்ட முடியாமல் திணறினர். மேலும் இவ்வளவு ரன்கள் கொடுத்ததற்கு இந்திய அணியில் கூடுதல் பந்துவீச்சாளர் இல்லை என்பதுதான் குறை.

Kohli

மேலும் ஹர்திக் பாண்டியா தற்போது ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடிவருகிறார். அவரால் பந்து வீச முடியவில்லை. இந்த போட்டி முடிந்த பின்னர் ஒரு கூடுதல் பந்து வீச்சாளரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது பந்து வீசும் ஒரு பேட்ஸ்மேனை தயார் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் கேப்டன் விராட். அதே நேரத்தில் ஹர்திக் பாண்டியா, தான் சரியான நேரம் வரும்போது பந்து வீசுவேன் என்று கூறியிருந்தார்

- Advertisement -

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் கௌதம் காம்பிர் கூறுகையில்… இந்திய அணியில் பேலன்ஸ் இல்லை. இந்த பிரச்சனை கடந்த உலக கோப்பை தொடரில் இருந்து உள்ளது. ஹர்திக் பாண்டியாவினால் தற்போது பந்து வீச முடியவில்லை. இதன் காரணமாக ஆறாவது பந்துவீச்சாளராக இருப்பார் தற்போது விஜய் சங்கர் மட்டுமே அந்த போட்டிக்கு சரியான ஆளாக இருக்கிறார் என்று நினைக்கிறேன் .

ஆனால் ஹர்திக் பாண்டியா அளவிற்கு அவரது பேட்டிங் பிடிக்க முடியுமா என்றால் கேள்விக்குறிதான். மேலும் ஏழு ஒவர்களை மிகச் சரியாக வீச அவரால் முடியுமா என்பது சந்தேகம் தான். டாப் ஆடர் பேட்ஸ்மேன்கள் கண்டிப்பாக ஒரு சிலர் ஒரு சில ஓவர்கள் பந்து வீச வேண்டும். ஆஸ்திரேலிய அணியில் இதுபோன்ற பிரச்சினை இல்லை.

Pandya-4

அதே வேளையில் நிச்சயம் பாண்டியாவின் இடத்தினை விஜய் ஷங்கரால் நிரப்ப முடியாது. பாண்டியாவின் பலம் வேறு, விஜய் ஷங்கரின் பலம் வேறு அதனால் இந்திய அணி நிச்சயம் புதிய ஆல்ரவுண்டர்களை கண்டறிய வேண்டும். அதே வேளையில் ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல் போன்ற ஆல்ரவுண்டர்கள் கை கொடுத்து விடுகிறார்கள். ஆனால் யார் இந்திய அணியில் அதனை செய்யப்போவது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் கௌதம் கம்பீர்.

Advertisement