கோலியை விட இந்த ஒரு விஷயத்தில் ரோஹித் சிறப்பாக செயல்படுகிறார் – கம்பீர் புகழாரம்

Gambhir

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஐந்தாவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி மும்பை அணி அசத்தியது. இந்த ஐந்து முறையும் மும்பை அணியை தலைமை தாங்கிய ரோஹித்தின் கேப்டன்ஷிப்பை பற்றி அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்திய அணிக்கு ரோஹித்தை ஏதாவது ஒரு வடிவத்தில் கேப்டன் ஆக்கலாம் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருவது மட்டுமின்றி தங்களது கருத்துக்களையும் முன்மொழிந்து வருகின்றனர்.

mi

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கிரிக்இன்போ இணையதளத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அது குறித்து அவர் கூறுகையில் : இந்தியாவுக்கு ரோகித் சர்மா கேப்டன் ஆகவில்லை என்றால் அவருக்கு எந்த இழப்பும் இல்லை. ஒரு நல்ல கேப்டன் என்பதை எந்த அளவுகோல் வைத்து முடிவு செய்கிறீர்கள் ? அப்படிப் பார்த்தால் ரோகித் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை பெற்று தந்துள்ளார்.

தோனியை இப்போதும் நாம் மிகச் சிறந்த கேப்டன் என்று சொல்கிறோம். ஏனெனில் அவர் இந்தியாவிற்காக இரண்டு உலகக் கோப்பை, 1 சாம்பியன்ஸ் கோப்பையை பெற்று தந்துள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் கோப்பையை மூன்று முறை பெற்றுக் கொடுத்துள்ளார். அதேபோல ரோகித் சர்மா 5 முறை ஐபிஎல் கோப்பையை பெற்று தந்துள்ளார்.

Rohith

இதனால் ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டனாக ரோகித் பார்க்கப்படுகிறார். அவரை இந்திய டெஸ்ட் அணிக்கு அல்லது இந்திய டி20 அணிக்கு கேப்டனாக்கவில்லை என்றால் அதைவிட கேவலமான விடயம் இருக்காது என்று கூறியுள்ளார் கம்பீர். தொடர்ந்து பேசிய அவர் : ரோஹித்தை கேப்டன் ஆக்கவில்லை என்றால் இறுதிவரை அவர் அணியின் வெற்றிக்கு உதவி செய்யும் ஒரு அவராகவே அணியில் தொடர்வார்.

- Advertisement -

Rohith

அதனால்தான் சொல்கிறேன் இந்திய டெஸ்ட் அணிக்கு ரோஹித்தை கேப்டனாக்க வேண்டும். அவருடைய கேப்டன்சி திறமை சிறப்பாக இருக்கிறது. கோலி சிறந்த கேப்டன் இல்லை என நான் கூறவில்லை. இருப்பினும் ரோஹித் அவரை விட திறமையாக செயல்படுகிறார் என்பதே என்னுடைய கருத்து என்று கூறியுள்ளார் கம்பீர்.