எந்த நேரத்திலும் போட்டியை மாற்றும் திறன் படைத்தவர் இவர். இந்திய அணியின் மேட்ச் வின்னர் – கம்பீர் புகழாரம்

Gambhir

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. முதல் போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இத்தொடரை இந்திய அணி 1 க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

pant 2

இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் சரி, இதற்கு முன்னர் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சரி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் முன்னெல்லாம் அவசரப்பட்டு விளையாடி ஆட்டமிழந்து வெளியேறும் ரிஷப் பண்ட் இப்போதெல்லாம் சரியான பந்துகளை தேர்வு செய்து அதிரடியாக விளையாடுவதால் நிறைய ரன்களை குவிக்கிறார்.

அதுமட்டுமின்றி போட்டியை எந்த நேரத்திலும் இந்தியாவிற்கு சாதகமாக திரும்பும் ஆற்றலும் அவர் பெற்றுள்ளார். அவரது தொடர்ச்சியான இந்த சிறப்பான விளையாட்டு அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார். இந்நிலையில் ரிஷப் பண்ட் ஆட்டம் குறித்து பாராட்டி பேசிய கம்பீர் கூறுகையில் : அவர் எந்த அளவு பேட்டிங் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுகிறாறோ அதேபோன்று விக்கெட் கீப்பிங்கிலும் முன்னேறி வருகிறார்.

Pant

அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டால் அன்றைய தினத்தில் விக்கெட் கீப்பிங் இன்னும் சிறப்பாக செயல்படுவார். சமீப காலமாக நடைபெற்று வரும் அனைத்து போட்டியிலும் அதிக ரன்களை குவித்து வருகிறார். ஒரு வீரராக 6வது இடத்தில் இறங்கி போட்டியை தங்களது அணிக்கு சாதகமாக மாற்றும் வீரர்கள் சிலர்தான் சர்வதேச கிரிக்கெட்டில் உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு திறமையான வீரராக ரிஷப் பண்ட் தற்போது மாறிக் கொண்டு வருகிறார் என்று கம்பீர் கூறினார்.

- Advertisement -

pant

மேலும் பின்வரிசையில் இறங்கி போட்டியை தன்வசம் மாற்றும் திறமை படைத்த பண்ட் இந்திய அணிக்கு நிச்சயம் ஒரு மேட்ச் வின்னர் ஆக திகழ்வார் என்றும் புகழாரம் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் தனது இடத்தை இழந்த பண்ட் இனிவரும் தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இடம் பிடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.