ராகுல் மீண்டும் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்ப இதனை செய்தே ஆக வேண்டும் – கம்பீர் வேண்டுகோள்

Gambhir

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய கேஎல் ராகுல் அவ்வளவு சரியாக ஆடவில்லை.டி20 தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் கேஎல் ராகுல் இந்த டி20 தொடரில் மிகச்சிறந்த அளவில் செயல்பட்டு நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் , மிக மோசமாக ஆடி 2ம் இடத்தில் இருந்து கீழே இறங்கி உள்ளார். நான்கு போட்டிகளில் மொத்தமாக 15 ரன்கள் மட்டும் தான் அடித்தார். அதிலும் இரண்டு டக் அவுட் என்பது குறிப்பிடத்தக்கது.

rahul

இந்நிலையில் ஒருநாள் தொடரில் மீண்டும் ஆடுவாரா ? அவருக்கு இந்திய அணி வாய்ப்பு அளிக்குமா என்ற ஒரு பக்கம் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் கௌதம் கம்பீர் அதற்கு மிக சிறந்த பதிலை வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஒரு தொடரை கொண்டு கே எல் ராகுல் நாம் குறை கூறி விட முடியாது. அதற்கு முன் அவ்வளவு சிறப்பாக ஆடிய வீரர் ஆவார். எனவே அவரை இந்திய அணி பெஞ்சில் உட்கார வைத்து விடக்கூடாது.

அப்படி அவரை உட்கார வைத்தால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாவார், ஒரு கிரிக்கெட் வீரருக்கு இது நிச்சயம் ஏற்படும். கேஎல் ராகுல் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் அதை எவராலும் மறுக்க முடியாது.இந்திய அணி அவருக்கு அந்த ஒரு நாள் தொடர் முழுவதும் அதாவது மூன்று போட்டிகளிலுமே ஆடும் வாய்ப்பை வழங்க வேண்டும். இதுவே இந்திய கிரிக்கெட் அணி அவருக்கு செய்யும் மிக சிறந்த உதவியாகும்.

rahul 1

ஆஸ்திரேலியா டி20 தொடரில் ஆடிய பின்னர் கேஎல் ராகுல் எந்தவித சர்வதேச போட்டிகளிலும் ஆடவில்லை. அதே போல எந்தவித உள்ளூர் ஆட்டங்களில் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்த இடைப்பட்ட கால இடைவெளியே அவரது மோசமான ஃபார்முக்கு காரணம் ஆகும். எனவே கே எல் ராகுலுக்கு ஒருநாள் தொடரில் வாய்ப்பு அளிப்பதன் மூலம் நிச்சயம் அவர் பழைய ஃபார்முக்கு வருவார்.

- Advertisement -

Rahul

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு மூன்று போட்டிகளிலும் ஆடும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கம்பீர் கூறியுள்ளார்.