இந்த ரூல்ஸ் மட்டும் முன்னாடியே இருந்திருந்தா கும்ப்ளே 900, ஹர்பஜன் 700 விக்கெட்டுகளை எடுத்திருப்பாங்க – கம்பீர் ஓபன் டாக்

Kumble
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று தற்போது பாஜக எம்பியாக செயல்பட்டு வருகிறார். மேலும் அவ்வப்போது கிரிக்கெட் குறித்த சுவாரசியமான தகவல்களை வெளியிடுவதுடன், கிரிக்கெட் போட்டிகள் குறித்த தனது விமர்சனத்தையும் சமூக வலைதளங்கள் வழியாக உடனுக்குடன் வெளியிடும் பழக்கத்தை கம்பீர் பின்பற்றி வருகிறார்.

Gambhir 1

- Advertisement -

அந்த வகையில் தான் விளையாடிய காலகட்டத்தில் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த கம்பீர் : கும்ப்ளேவை வெகுவாக பாராட்டி இருந்தார். பொதுவாக 2000 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார் என்றால் பலரும் கங்குலி, தோனி, கோலி என இவர்களை மட்டுமே கூறுவார்கள். ஆனால் கம்பீர் சற்று வித்தியாசமாக சிறிய காலம் கேப்டனாக இருந்த கும்ப்ளேவை குறிப்பிட்டிருந்தார்.

அதன் காரணம் யாதெனில் டெஸ்ட் போட்டிகளில் அணியை வழிநடத்திய விதம் என்று கம்பீர் கூறியுள்ளார். இது குறித்து விரிவாக கூறுகையில் : ஒருமுறை ஆஸ்திரேலிய தொடருக்கு இந்திய அணி தயாராகிக்கொண்டிருந்தது. அப்போது கும்ப்ளே கூறிய வார்த்தைகள் எனக்கு புத்துணர்ச்சியை அளித்தது. என் கிரிக்கெட் வாழ்வில் வேறு யாரும் கூறி நான் அதனை கேட்டதே இல்லை என்று கூறியுள்ளார்.

Gambhir 2

மேலும் இது குறித்து விரிவாக கூறுகையில் : நானும் சேவாக்கும் ஒரு முழுநீள டெஸ்ட் தொடருக்கு முன்பு இரவு உணவு உண்டு கொண்டிருந்தோம். அப்போது வந்த கேப்டன் கும்ப்ளே இந்த தொடர் முழுவதும் என்ன நடந்தாலும் நீங்கள்தான் ஓப்பனிங் செய்ய போகிறீர்கள் நீங்கள் இருவருமே 8 இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆனாலும் பரவாயில்லை. உங்களுடைய திறனை நீங்கள் வெளிப்படுத்த உங்களுடைய பாணியிலே ஆடவேண்டும் என்று கூறினார்.

- Advertisement -

அது போன்ற வார்த்தைகளை அதுவரை என் கேரியரில் கேள்விப்பட்டதே இல்லை. மேலும் நான் யாருக்காவது உயிரை கொடுக்க வேண்டும் என்றால் அது கண்டிப்பாக அணில் கும்ப்ளே ஒருவருக்குத்தான் என்றும் அவர் கூறிய அந்த வார்த்தைகள் என் இதயத்தில் இன்னும் பசுமையாக உள்ளன என்று உணர்ச்சியுடன் கூறினார் கம்பீர். கும்ப்ளே மட்டும் நீண்ட காலமாக டெஸ்டில் கேப்டன்ஷிப் செய்திருந்தால் இன்னும் பல சாதனைகளை அவரால் எளிதில் படைத்திருக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

kumble

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது உள்ள டி.ஆர்.எஸ் விதிமுறை ஏற்கனவே இருந்திருந்தால் கும்ப்ளே 900 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் 700 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருப்பார்கள். இவர்கள் விளையாடிய காலத்தில் டி.ஆர்.எஸ் விதிமுறை இல்லாத காரணத்தினால் பல எல்.பி.டபுள்யூ விக்கெட்டுகளை இழந்துள்ளனர். கும்ப்ளே 132 டெஸ்டில் பங்கேற்று 612 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதே போல ஹர்பஜன் சிங், 103 டெஸ்டில் 417 விக்கெட் வீழ்த்தி இந்திய அணி சார்பாக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளது.

kumble 1

இந்திய அணியின் சிறந்த கேப்டன் என்று யார் என்று கேட்டால் பலரும் கங்குலி தோனி என்று கூறுவார்கள். ஆனால் இந்திய அணியின் வீரர்களான கம்பீர் மற்றும் ஆர்.பி.சிங் ஆகியோர் சிறிதும் தயக்கமின்றி கும்ப்ளேவை கூறுவார்கள். ஏனெனில் கும்ப்ளே கேப்டனாக இருந்தபோது மிகப்பெரிய தாக்கத்தை அவரது வார்த்தைகளின் மூலம் அணிக்குள் உத்வேகத்தை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement