தோனியை விட கூறிய சிறந்த கேப்டன் என்றால் அது கோலிதான். கம்பீர் சொல்லும் காரணம் சரியா ? – விவரம் இதோ

Gambhir
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி இந்திய மண்ணில் நடந்து 11 ஆவது டெஸ்ட் தொடரை தொடர்ச்சியாக கைப்பற்றி உலக சாதனை படைத்துள்ளது.

IND vs RSA

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தோல்வியை கண்டு அஞ்சினால் வெற்றி பெற முடியாது கோலியின் வெற்றியின் ரகசியமே தோல்வியை கண்டு அஞ்சாதது தான்.

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் மிகச் சிறந்த கேப்டன் கங்குலி, டிராவிட் மற்றும் தோனியைவிட கோலிதான் சிறந்தவர் என்று நான் கூறுவேன். ஏனெனில் அந்நிய மண்ணில் நடந்த டெஸ்டிலும் கோலியின் தலைமையில் இந்திய அணி வென்று காட்டியுள்ளது. மேலும் மற்ற கேப்டன்கள் எடுக்காத ரிஸ்க்கை கோலி எளிதாக எடுக்கிறார்.

Ind

வெளிநாடுகளில் ஐந்து பவுலர்களை கொண்டு தைரியமாக களமிறங்கும் ஒரே கேப்டன் கோலி தான் மற்ற நாடுகளில் இன்னொரு பேட்ஸ்மேனை சேர்த்துக் கொண்டால் அணி தோற்காமல் இருக்கும் மற்ற கேப்டன்கள் முடிவெடுப்பார்கள் ஆனால் கோலி 5 பந்துவீச்சாளர்கள் தைரியமாக செயல்படுகிறார். இதுவே கோலியின் வெற்றிக்கு காரணம் என்று நான் நம்புகிறேன் என்று கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement