இந்திய அணிக்கு தோனி கடந்த 2004ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு கேப்டன் பதவிக்கு உயர்ந்தார். அப்போது அவர் ஒரு புதிய அணியை கட்டமைக்க பல இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஆதரவையும் அளித்து வந்தார். அவர்களில் சிலர்தான் ரோகித் சர்மா, விராட் கோலி, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ,ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றவர்கள்.

நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து வீரர்களும் தற்போது சீனியர் வீரர்கள் ஆகிவிட்டனர். இவர்களும் அதே போன்ற இளம் வீரர்களுக்கு ஆதரவளித்து செயல்பட வேண்டும் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது குறித்து கௌதம் கம்பீர் கூறுகையில் : இந்திய கிரிக்கெட்டில் தற்போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தான் சீனியர் வீரர்கள் இவர்கள்.
இருவரும் இளம் வீரர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். தற்போதைய இளம் வீரர்களான சுப்மன் கில், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு பெரும் ஆதரவு தேவை. ரோகித் சர்மாவிற்கு தோனி அளித்த ஆதரவை போன்று அவரும் வரும் இளம் வீரர்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். விராட் கோலி மற்றும் றோஹித் சர்மாவிடமும் இதை நான் எதிர்பார்க்கிறேன்.

தோனியை போன்றே இவர்களும் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார் கவுதம் கம்பீர். ரோகித் சர்மா கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகம் ஆகி ஐந்து வருடங்கள் பெரிதாக ஏதும் சாதிக்காமல், அதன் பின்னர் தோனியின் தயவால் 2013 ஆம் ஆண்டு துவக்க வீரராக களமிறங்கி தற்போது உலகின் மிகச்சிறந்த வீரராக மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று தற்போது திறமையுடன் இருக்கும் இளம்வீரர்களை தொடர்ந்து சீனியர் வீரர்கள் ஆதரவு அளித்து, அவர்களுக்கான ஆலோசனைகளையும் வழங்கி அவர்களை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவதும் சீனியர் வீரர்களின் கடமையே. மேலும் வருங்கால இந்திய அணியை கடமைப்பதும் மிக அவசியமான ஒன்று. எனவே வருங்காலத்தை கணக்கில் கொண்டு இளம்வீரர்களின் திறமைகளை சோதிக்க வேண்டும் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை கோரி வருவது குறிப்பிடத்தக்கது.



