தோனியால் இதுமுடியாது என்பதை கூறி அவரை அணியில் இருந்து நீக்குங்கள் – கம்பீர் விளக்கம்

gambhir
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தி வெளியாகிய வண்ணம் உள்ளது. அவரைப் பற்றி முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போதைய வீரர்கள் என அனைவரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் தோனி இது குறித்தெல்லாம் கவலை படாமல் தனது பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். ஓய்வு அறிவிப்பை இன்னும் வெளியிடாமல் பயிற்சியை மேற்கொண்டு வரும் தோனி விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

dhoni

- Advertisement -

மேலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள டி20 தொடரில் அவர் பங்கேற்பார் என்று செய்திகள் வெளிவாகியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதி அவர் கூறியதாவது : தோனி ஓய்வு குறித்து அவரே முடிவெடுக்க வேண்டும் என்பது உண்மை தான் இருப்பினும் அவருக்கு பதிலாக தற்போது இளம் வீரர்களை தேர்ந்தெடுப்பது அவசியம்.

ஏனெனில் தோனியால் 2023 ஆம் உலக கோப்பை தொடரை விளையாட முடியாது. அதற்கு அவர் உடல் தகுதியும் ஒத்துழைக்காது என்பதை தெளிவாக இந்திய அணி நிர்வாகம் அல்லது கேப்டன் ஆகியோர் தோனிக்கு புரியவைக்க வேண்டும். மேலும் அவருடைய வயது அதற்கு சரிவராது எனவே அடுத்த டி20 தொடரில் அவர் பங்கேற்றாலும் 50 வரை உலக கோப்பை தொடரில் அவரால் பங்கேற்க முடியாது எனவே சில வாய்ப்புகளை தோனிக்கு வழங்கி அதன் பின்னர் தோனிக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும்.

Pant

தோனிக்கு பிறகு தற்போது இந்திய அணியில் பண்ட் விளையாடி வந்தாலும் இன்னும் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் போன்ற பல வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பதால் அவர்கள் மீது நாட்டம் காட்டி இந்திய அணியை பலமான அணியாக உருவாக்குங்கள் என்று கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement