சச்சினுக்கு சமமான இவரை குறைத்து மதிப்பிடுகின்றனர். அவருக்கான மரியாதை கிடைக்கவில்லை – கம்பீர் உருக்கம்

Gambhir
- Advertisement -

இந்திய அணியில் கவாஸ்கர், சச்சின், கோலி ஆகிய மூவரும் அவரவர் தலைமுறையில் சிறந்த பேட்ஸ்மேனாக பார்க்கப்படுகின்றனர். ஆனால் இவர்கள் அனைவரும் சதங்கள் மற்றும் சாதனைகள் அடிப்படையில் சிறப்பான வீரர்களாக இருந்தாலும் அதனை கடந்து பேட்டிங் டெக்னிக் மற்றும் நெருக்கடியை சந்தித்து, மனவலிமையும் கொண்ட இந்திய அணியின் தலைசிறந்த வீரராக ராகுல் டிராவிட் பார்க்கப்படுகிறார்.

Dravid 1

- Advertisement -

அவரது திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் 1996ம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை இந்திய அணியில் ஆடிய டிராவிட் மொத்தம் 509 சர்வதேச போட்டிகளில் விளையாடி 24208 ரன்கள் குவித்துள்ளார். மேலும் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 6வது இடத்தில் இருப்பவர் டிராவிட்.

இந்திய அணியில் சுயநலமாக ஒரு இன்னிங்ஸ் கூட ஆடாத வீரர் என்ற பெருமையை பெற்றவர் டிராவிட். சாதனைகளை குறித்து ஆடாமல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு விளையாடியவர் டிராவிட். டெக்னிகலாக மிகச் சிறந்த பேட்ஸ்மேன் சச்சினுக்கு சற்றும் சளைத்தவரல்ல என்று ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் ஒருவர் பாராட்டி உள்ளார்.

dravid

ஆனால் சச்சின், தோனி, கோலி போன்ற வீரர்கள் பேசப்படும் அளவிற்கு ஓவராக தூக்கி வைத்து கொண்டாடப்படும் அளவிற்கு ராகுல் டிராவிட்க்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காமல் சாதாரணாமாகவே மதிப்பிடப்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இந்த விடயம் குறித்து பேட்டியளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது :

- Advertisement -

நான் கங்குலி கேப்டன்சியில் தான் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனேன். ஆனால் எனது முதல் டெஸ்ட் போட்டியை ராகுல் டிராவிட் தலைமையில் தான் விளையாடினேன். ராகுல் டிராவிட் கேப்டன்சியில் கிடைக்க வேண்டியதை இழந்தது அவரது துரதிஷ்டம். கங்குலி, தோனி ஆகியோரைப் பற்றிப் பேசிவரும் நாம் இந்தியனின் மிகச் சிறந்த கேப்டன் டிராவிட் பற்றி மட்டும் பேசுவதில்லை. அவருடைய ரெக்கார்டுகளும் பெரிய அளவில் பேசப்படவில்லை.

Dravid

இதுவரை டிராவிட் குறைத்தே மதிப்பிடப்பட்டுள்ளார். அவருக்கு உண்டான சரியான க்ரெடிட் மற்றும் அங்கீகாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்றுதான் கூறுவேன். நாட்டுக்காக 16 ஆண்டுகள் விளையாடிய அவருக்கு சரியான அங்கீகாரத்தை யாரும் தரவில்லை என்று தான் கருதுவதாகவும் ஆனால் டிராவிட் இந்திய அணி மறுக்கமுடியாத மிகச்சிறந்த வீரர் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement