கேப்டன்னு சொன்னாலே கங்குலி, தோனி தான் உங்களுக்கு நியாபகம் வருமா ? – கம்பீர் ஆதங்கம்

Gambhir

இந்திய அணியில் சச்சின் அறிமுகமாகி நீண்ட காலம் விளையாடிய பின்னர் தான் டிராவிட் அறிமுகமானார். கங்குலியும் அவரும் டெஸ்ட் போட்டிகளில் ஒரே நேரத்தில் அறிமுகமானவர்கள். இதில் சச்சின் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும், கங்குலி சிறந்த கேப்டனாகவும் இந்திய அணியில் புகழின் உச்சத்தை அடைந்தனர்.

dravid

ஆனால் இவர்கள் இருவருக்கும் சற்றும் சளைக்காத வீரராக டிராவிட் ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். எப்பொழுதும் தான் விளையாடும் போட்டிகளில் சுயநலமின்றி இந்திய அணியின் வெற்றிக்காக விளையாடுபவர். தொடர்ச்சியாக இந்திய அணியை தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

எப்பொழுதெல்லாம் இந்திய அணி சரிவை சந்திக்கிறதோ அப்போது அணியின் தூணாக களமிறங்கும் டிராவிட் அணியை சரியான திசைக்கு திருப்புவதில் வல்லவர். டெஸ்ட் போட்டிகளில் இவர் எத்தனையோ போட்டிகளை அசாத்தியமாக விளையாடி உள்ளதை நாம் கண்டிருக்கிறோம். மேலும் கேப்டனாகவும் சில ஆண்டுகள் செயல்பட்டு டிராவிட் சிறப்பாக செயல்பட்டார்.

Dravid 1

ஆனால் சச்சின், கங்குலி அளவிற்கு இவரை புகழ் எட்டவில்லை என்பது உண்மையே. இந்நிலையில் தற்போது டிராவிட் குறித்த சில தகவல்களை தனது ஆதங்கமாக இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரான கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கம்பீர் கூறுகையில் : நான் கங்குலி தலைமையில் இந்திய அணியில் அறிமுகமானேன்.

- Advertisement -

ஆனால் டிராவிடின் தலைமையில் தான் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானேன். ஆனால் அவர் ஒரு சிறந்த கேப்டனாக இருந்தாலும் அவருக்கு உண்டான உரிய மதிப்பை நாம் அளிக்காதது துரதிஷ்டம். மேலும் கங்குலி தோனி பற்றியே எப்பொழுதும் நாம் கேப்டன்கள் குறித்த விவாதத்திற்கு எடுத்து பேசுகிறோம். ஆனால் அவர்களைவிட டிராவிட் இந்திய அணிக்கு அட்டகாசமான கேப்டனாக இருந்தார். அவரது ரெக்கார்டை வைத்து அவரை குறைத்து மதிப்பிட வேண்டாம். அவர் மதிப்பிட முடியாத தலைவர் என்று கம்பீர் பேசினார்.

Dravid

மேலும் டிராவிட் தலைமையில் இங்கிலாந்தில், வெஸ்ட் இண்டீஸ் இல் தொடரை வென்றோம். அதுமட்டுமின்றி 15 போட்டிகள் வரை அவரது தலைமையில் வெற்றி பெற்றுள்ளோம் என்றும் கம்பீர் கூறினார். மேலும் இதுகுறித்து பேசிய அவர் அணிக்கு என்ன தேவையோ அதற்கு ஏற்றார்போல் அனைத்து ரோல்களிலும் இறங்கும் ஒரே வீரர் டிராவிட் தான் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.