இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் இந்திய லெவன் அணியை தேர்வு செய்த கம்பீர் – லிஸ்ட் இதோ

Gambhir
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிகப்பெரிய தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிவடைந்த நிலையில் தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் முடிவடைந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

indvsaus

- Advertisement -

அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்கள் மட்டும் எடுத்து படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பதால் அவர் இந்தியா திரும்பவுள்ளதால், மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதால் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார்.

இந்தியாவின் இந்த தோல்வி குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.இதைத் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் மீதமுள்ள போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் 2வது டெஸ்ட் போட்டிக்கான தனது ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

2வது டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக அஜிக்னியா ரஹானே, தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில், விராட் கோலியின் இடத்திற்கு கே எல் ராகுல், விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட், ஆல்-ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், பந்து வீச்சாளர்களாக ஜஸ்ப்ரிட் பும்ராஹ், நவ்தீப் சைனி/ முகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோரை தனது அணியில் தேர்வு செய்துள்ளார் கவுதம் கம்பீர்.

- Advertisement -

Rahane

கவுதம் கம்பீர் தேர்வு செய்த ஆடும் லெவன்;

சுப்மன் கில், மாயன்க் அகர்வால், புஜாரா, அஜிக்னியா ரஹானே (கே), கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் (வி.கீ), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், உமேஷ் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், நவ்தீப் சைனி/ முகமது சிராஜ்.

Advertisement