எவ்ளோ பெரிய இலக்கு என்றாலும் இவர் இருக்கும் வரை இனி கவலை இல்லை – கம்பீர் கருத்து

Gambhir
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து டி20 தொடரில் முதல் இரண்டு போட்டியில் ஆக்ரோஷத்துடன் விளையாடி வெற்றி பெற்ற இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது. நடைபெற்று முடிந்த இந்த டி20 தொடரை இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றி ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்து கொண்டது.

INDvsAUS

- Advertisement -

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்விக்கு பிறகு இந்திய அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டன அதில் தமிழகத்தைச் சேர்ந்த தங்கராசு நடராஜன் இந்திய அணியில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். தனது முதல் ஒருநாள் தொடரில் 2 விக்கெட்களை பெற்று இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார் நடராஜன். பங்கேற்ற 4 போட்டிகளில் 8 விக்கெட்களை பெற்று சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்தினார். இதன் மூலம் இந்திய அணியின் நிரந்தர வீரராக உருவானார் நடராஜன்.

இதைத்தொடர்ந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் ஒரு முழுநேர பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிரடியான பேட்டிங்கின் மூலம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 76 பந்துகளில் 92 ரன்கள் அடித்திருந்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸும் அடித்திருந்தார்.

pandya

இதேபோல் 2வது டி20 தொடரில் இந்திய அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது ஹர்திக் பாண்டியா களத்தில் இறங்கி 22 பந்துகளில் 42 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார் பாண்டியா. டி20 தொடரில் சிறப்பாக விளையாடியதால் தொடர் நாயகன் விருதையும் பெற்றார். இதனால் தங்கராசு நடராஜனுக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் அதிகமான பாராட்டுகள் குவிய தொடங்கின.

Wade

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீரும் ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் “ஹர்திக் பாண்டியாவை நம் அனைவருக்கும் தெரியும் எவ்வளவு சிறந்த வீரர் என்று, இருப்பினும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளிலும் தனது முழு திறமையையும் காட்டி இந்தியா வெற்றி பெற உதவினார். முன்பு யுவராஜ் சிங், தோனி போன்ற வீரர்கள் இருந்தார்கள். தற்போது ஹர்திக் பாண்டியா இருக்கிறார். ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் களத்தில் இருக்கும் போது எவ்வளவு பெரிய இலக்கையும் எட்டிவிட முடியும்” என்றார் கவுதம் காம்பீர்.

Advertisement