தோனி மட்டும் இதை செய்ஞ்சிருந்தா இன்னைக்கு உலகின் எல்லா சாதனையும் அவருக்கு சொந்தமாகி இருக்கு – கம்பீர் புகழாரம்

Gambhir
- Advertisement -

இந்திய அணிக்காக தோனி கடந்த 2004ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வருகிறார். கங்குலி தான் அவருக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தார். நேர்த்தியாக ஆடத் தெரியவில்லை என்றாலும் அதிரடியாக பந்தை பார்த்து அடிப்பதில் தோனி வல்லவர். முதன்முதலில் ஆடியபோது தோனி முதல் ஐந்து போட்டிகளில் 5 முதல் 7 வது இடத்தில் தான் இறக்கி விடப்பட்டார்.

- Advertisement -

பின்னர் சௌரவ் கங்குலி மனது வைத்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மூன்றாவது இடத்தில் களம் இறக்கி விட்டார். அன்று ருத்ர தாண்டவம் ஆடி 148 ரன்கள் குவித்தார் தோனி. அதனைத் தொடர்ந்து கங்குலியின் தலைமையில் தோனி தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ஆடி அசத்தி வந்தார். மேலும் வெறும் 33 போட்டிகளிலேயே ஆயிரம் ரன்களைக் குவித்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்தவர் தோனி.

இந்நிலையில் இது குறித்து பேசிய கௌதம் கம்பீர் தோனியை பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில்…

கிரிக்கெட் உலகம் தோனியை தவற விட்டுவிட்டது. தோனி கேப்டன் ஆன பிறகு அவர் அணியை வழி நடத்துவதில் தனது கவனத்தை செலுத்திவிட்டார். அதேநேரத்தில் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு தனது மூன்றாவது இடத்தையும் கொடுத்துவிட்டார். இதனால் அவரை மூன்றாவது இடத்தில் இறங்கும் பேட்ஸ்மேனாக கிரிக்கெட் உலகத்தால் பார்க்க முடியவில்லை.

- Advertisement -

Gambhir-1

ஒருவேளை தொடர்ந்து அவரது மூன்றாவது இடத்தில் விளையாடி இருந்தால் நாம் வேறு மாதிரியான தோனியை பார்த்திருக்கலாம். இன்று பெயரளவில் இருக்கும் அதிகமான ரன்கள், அதிகமான சிக்ஸர்கள், அதிகமான சதங்கள் என பல சாதனைகளை உடைத்து இருந்திருப்பார் தோனி என்று வாய் நிறைய புகழ்ந்துள்ளார் கௌதம் கம்பீர்.

Gambhir

கௌதம் கம்பீர் கூறுவது கிட்டதட்ட உண்மைதான் ஏனெனில் மூன்றாவது இடத்தில் 16 போட்டிகளில் ஆடியுள்ள தோனி 6 அரை சதமும் 2 சதம் விளாசியுள்ளார். மேலும், 993 ரன்கள் குவித்துள்ளார் இதன் சராசரி 82 ஆக இருக்கிறது இப்படி இருந்தால் அவர் 15,000 ரன்கள் குவித்து இருப்பார் என்பது மட்டும் உறுதி.

Advertisement