நான் சந்தித்ததில் கடினமான பவுலர் இவர்தான். பாகிஸ்தான் பவுலரை தேர்வு செய்த கம்பீர் – அந்த பவுலர் யார் தெரியுமா ?

Gambhir
- Advertisement -

இந்திய அணியின் மிகச் சிறந்த வீரர்கள் கௌதம் கம்பீரும் ஒருவர். அதிரடியான துவக்க ஆட்டக்காரரான இவர் இந்திய அணிக்காக பல முக்கியமான போட்டிகளில் சிறப்பாக விளையாடி உள்ளார். குறிப்பாக சச்சின், கோலி, ரோகித் போன்ற திறமையான பேட்ஸ்மேன்கள் நிறைய சாதனைகளை படைத்தாலும் ஐசிசி நடத்தும் உலக கோப்பை தொடர்களில் சிறப்பாக செயல்பட முடியாமல் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

gambhir1

ஆனால் இதற்கு அப்படியே நேர் எதிரானவர் கம்பீர். உலக கோப்பை தொடரின் முக்கிய போட்டிகளில் கடும் நெருக்கடிகளை சமாளித்து ஆடுவதில் வல்லவர். அதை உணர்த்தும் விதமாக 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனி ஆளாக நின்று 75 ரன்கள் குவித்த கம்பீர் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

அது மட்டுமின்றி 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த இருந்த 275 ரன்களை விரட்டியபோது 3 ஆவது வீரராக களமிறங்கி 97 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். அந்த அளவிற்கு ஐசிசி தொடர்களின் போது அவர் பிரமாதமாக விளையாடக்கூடியவர்.

Gambhir-1

கம்பீர் இதுவரை இந்திய அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 147 ஒருநாள் போட்டிகள், 37 டி20 போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட பத்தாயிரம் ரன்களை குவித்துள்ளார். சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடிய அவர் இருமுறை அந்த அணியின் கேப்டனாக இருந்து ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இப்படி தனது கிரிக்கெட் கெரியரில் சிறப்பாக செயல்பட்ட கம்பீர் தற்போது தான் எதிர்கொண்ட சிறந்த பந்துவீச்சாளர் குறித்து பேசியுள்ளார்.

- Advertisement -

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நடத்திய கிரிக்கெட் கனெக்ட் என்ற நிகழ்ச்சியில் வி.வி.எஸ் லட்சுமணனுடன் இதுகுறித்து பகிர்ந்து கொண்டார். அந்த உரையாடலின் போது கடினமான பந்துவீச்சாளர் குறித்து கௌதம் கம்பீர் பேசுகையில் : என்னை பொருத்தவரை பாகிஸ்தான் அணியின் ஆப் ஸ்பின்னர் சயீத் அஜ்மல் தான் நான் எதிர்கொண்ட கடினமான பவுலர் என்று கூறியுள்ளார்.

ajmal 1

ஏனெனில் அவருக்கு எதிராக எனக்கு பேட்டிங் செய்ய மிகவும் பிடிக்கும். நான் எதிர் கொண்டு ஆடிய சிறந்த ஆப் ஸ்பின்னர்களில் அஜ்மலும் ஒருவர். அவருடைய ஸ்பின் பவுலிங்கில் ஆடுவது மிகவும் கடினம். அதுவும் இரவுநேர லைட் வெளிச்சத்தில் அவரது பந்து வீச்சை எதிர் கொள்வது ரொம்ப கடினம். நல்ல வேகமாகவும் அதே அளவுக்கு தூஸ்ரா பந்துகளையும் அவர் வீசுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் வீரர்களிடம் அடிக்கடி களத்தில் மோதிக்கொள்ளும் கம்பீர் அவர்கள் அணியின் பந்துவீச்சாளரை சிறந்த பந்துவீச்சாளர் என்று கூறியிருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. சயீத் அஜ்மல் பாகிஸ்தான் அணிக்காக 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 178 விக்கெட்டுகளையும், 113 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 184 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement