டி20 உலககோப்பையில் இந்த 4 அணிகளே அரையிறுதிக்கு முன்னேறும் – கவுதம் கம்பீர் தேர்வு

Gambhir
- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது இந்தியாவில் நிலவி வரும் கொரோனா பரவல் காரணமாக தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளும் முழு வேகத்தில் தயாராகி வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இந்த தொடரில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டது.

cup

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் வெல்லப் போகும் அணி எது ? அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் எது ? என்ற தங்களது கணிப்புகளை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள், நிபுனர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை டி20 தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் குறித்த தனது கருத்தினை கௌதம் கம்பீர் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இந்தக் கருத்தின்படி : இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று அவர் கூறியுள்ளார். t-20 உலக கோப்பை தொடரில் இதுவரை இந்தியா இங்கிலாந்து அணிகள் ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

மற்றபடி வெஸ்ட் இண்டீஸ் அணி இரு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. கம்பீர் கணித்துள்ள அணியில் நியூசிலாந்து அணி மட்டும்தான் ஒருமுறைகூட டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement