கம்பீர் தேர்வு செய்த ஆல்டைம் பெஸ்ட் லெவன் டெஸ்ட் அணி. கேப்டன் யாருன்னு பாருங்க – 11 பேர் கொண்ட அணி இதோ

Gambhir
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா ஊரடங்கில் முடங்கியுள்ளது. இதனால் கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறுவதில்லை. இந்த நேரத்தில் முன்னாள் வீரர்கள் ரசிகர்களுடன் சமூகவலைதளத்தில் உரையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார்.

Gambhir

- Advertisement -

இந்த அணியில் தொடக்க வீரர்களாக ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். இதில் விரேந்தர் சேவாக் அடித்து ஆடக்கூடியவர். மூன்றாவது வீரராக இந்திய கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் நான்காவதாக இந்திய கிரிக்கெட்டின் சுவர் ராகுல் டிராவிட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இருவருமே இந்திய அணிக்கு பெரும் தூணாக விளங்கியவர்கள்.

ராகுல் டிராவிட் 13,000 ரன்களையும் சச்சின் டெண்டுல்கர் கிட்டத்தட்ட 16000 ரன்களையும் குவித்துள்ளனர். அதனை தொடர்ந்து ஐந்தாவது இடத்திற்கு தற்போதைய இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியை தேர்வு செய்துள்ளார். கோலி தற்போது வரை பல சாதனைகளை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Kohli-4

ஆறாவது இடத்திற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவுசெய்யப்பட்டுள்ளார் இவர் விக்கெட் கீப்பராகவும் செயல்படுவார் விக்கெட் கீப்பராக இந்திய அணிக்காக 294 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் மற்றும் கும்ளே ஆகியோர் வருகின்றனர். வேகப்பந்து வீச்சிற்கு இடது கை வேகப்பந்து வீச்சாளராக ஜாஹீர் கான் மற்றும் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத் ஆகியோர் தேர்வு செய்துள்ளார் கௌதம் கம்பீர்.

ZaheerKhan

காம்பீர் இந்திய லெவன் அணி: சுனில் கவாஸ்கர், விரேந்தர் சேவாக், ராகுல் திராவிட், சச்சின், விராட் கோலி, கபில் தேவ், தோனி, ஹர்பஜன் சிங், அனில் கும்ளே (கே), ஜாகிர் கான், ஜவஹல் ஸ்ரீநாத்.

Advertisement