இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாஜக கட்சி சார்பாக டெல்லி மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை எதிர்ப்பு போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாக பதவியேற்றார்.

இந்நிலையில் அவர் கடந்த 15-ம் தேதி டெல்லியில் காற்று மாசுபாடு நெருக்கடி குறித்து விவாதிக்க உயர்மட்ட நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராக இருப்பதால் இந்தூரில் மைதானத்தில் வர்ணனையாளராக செயல்பட்டார்.
அதனால் அவர் நாடாளுமன்ற கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. மேலும் அதுமட்டுமில்லாமல் இந்தூரில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் அவரது நண்பர்களுடன் ஜிலேபி சாப்பிட்டு அதனை புகைப்படமாக ட்விட்டரிலும் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து ஷேம் ஆன் கம்பீர் என்ற ஹேஸ் டேக் பதிவிட்டு ட்விட்டரில் ட்ரெண்டாக்கினர்.

இதனை தொடர்ந்து தற்போது டெல்லி ஆங்காங்கே சில பகுதியில் கம்பீரை காணவில்லை என்றும் யாரேனும் பார்த்தீர்களா என்பது போல வாசகத்துடன் புகைப்படங்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன. மேலும் கடைசியாக அவரைப் பார்த்தது இந்தூரில் ஜிலேபி உண்டபோது என்ற வாசகமும் அந்த போஸ்டர்களில் உள்ளது. இதனை கம்பீரை அவமானப்படுத்தும் வகையில் சிலர் பரப்பி உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது இதனால் தற்போது டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



