ஏற்கனவே 1.50 கோடி கொடுத்த கம்பீர் தற்போது செய்த மிகப்பெரிய உதவி என்னனு தெரியுமா ? – ரசிகர்கள் பாராட்டு

Gambhir
- Advertisement -

கிரிக்கெட் வீரராக இருந்து தற்போது மாநிலங்களவை உறுப்பினராக மாறியுள்ள கவுதம் கம்பீர் பொதுமக்களுக்கு சேவை செய்ய துவங்கியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் இடதுகை துவக்க வீரரான கௌதம் கம்பீர் இந்தியாவில் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெற்றார்.

Gambhir

- Advertisement -

அதன் பின் உடனடியாக அரசியல் தொடர்பான வேலைகளை களமிறங்கினார். பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். அப்போது முதல் தற்போது வரை டெல்லி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் கரோனா வைரஸ் கடுமையாக பரவி வரும் வேளையில் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உபகரணங்கள் வாங்க ரூபாய் 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். மேலும் இதனைத்தொடர்ந்து பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான கவுதம் கம்பிர் தன்னுடைய எம்.பி.யின் உள்ளூர் மேம்பாட்டு திட்டத்திற்கான நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளார்.

gambhir

அதுமட்டுமின்றி தற்போது எம்.பி நிதியையும் தாண்டி மிகப்பெரிய நன்கொடை ஒன்றினை பிரதமர் கணக்கிற்கு கொடுத்துள்ளார். ஏற்கனவே கிரிக்கெட் வீரராக 50 லட்சம், எம்.பி யாக ஒரு கோடி கொடுத்தது மட்டுமின்றி தற்போது தான் இரண்டு வருடம் வேலைசெய்ததற்கான எம்.பி. சம்பளம் முழுவதையும் தற்போது பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

- Advertisement -

பொதுவாக ஒருமாதம், இருமாதம் சம்பளத்தை வழங்கவே பலரும் முன்வராத நிலையில் கம்பீர் எம்.பி.பதவியின் இரண்டு வருட சம்பளத்தையும் கொரோனா நிதிக்காக வழங்கியுள்ளது ரசிகர்களை வியக்கவைத்துள்ளது.

Gautham-Gambhir

கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் என அனைவரும் இந்த பாதிப்பிற்காக நிதியுதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement