விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரோடு சேர்த்து 4 வீரர்களை இந்திய அணியில் இருந்து நீக்க – கம்பீர் அதிரடி முடிவு

Gambhir
- Advertisement -

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து தான் பயிற்சியாளராக தொடர விரும்பவில்லை என ராகுல் டிராவிட் அறிவித்து விட்டதால் புதிய பயிற்சியாளருக்கான தேடல் பி.சி.சி.ஐ-யின் மூலம் நடைபெற்று வந்தது.

அந்த வகையில் ஏற்கனவே புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனை தொடர்ந்து பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரரான கௌதம் கம்பீர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் பி.சி.சி.ஐ-யின் நேர்காணல் நிகழ்விலும் கம்பீர் கலந்து கொண்டு தனது நிபந்தனைகளை பி.சி.சி.ஐ-யிடம் விவரித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக பதவியேற்கும் முன்னர் ஐந்து முக்கிய நிபந்தனைகளை பிசிசிஐ-யிடம் முன் வைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதில் முக்கிய நிபந்தனையாக இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் சாம்பியன் டிராபியை கைப்பற்றவில்லை எனில் அவர்களை அணியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அவர்களது நீக்கத்தின் போது பி.சி.சி.ஐ தலையிடக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் முக்கிய வீரர்களாக இடம் பிடித்து வரும் இந்த நான்கு வீரர்களும் ஐசிசி தொடர்களில் தொடர்ச்சியாக இடம்பிடித்து விளையாடி வந்தாலும் கோப்பையை வெல்லவில்லை. எனவே எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர்கள் கோப்பையை கைப்பற்றவேண்டும் இல்லையெனில் அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற அதிரடியான ஒரு நிபந்தனையை கம்பீர் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியா அந்த பாகிஸ்தான் வீரர் மாதிரியே ஆடுறாரு.. அதுதான் எனக்கு தோணுது – அம்பத்தி ராயுடு கருத்து

கம்பீர் எப்போதுமே அதிரடியான முடிவுகளை எடுக்கக்கூடியவர் என்பதால் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறிய பின்னர் இந்திய அணியில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

Advertisement