- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அடுத்த 2027 உலககோப்பையில் ஆடலாம்.. ஆனா ஒரு கண்டிஷன்.. மறைமுகமாக கோலி ரோஹித்துக்கு கடிவாளம் போட்ட கம்பீர்

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அந்த இறுதிப் போட்டியோடு விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற அனுபவ வீரர்கள் டி20 வடிவிலான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்கள். ஆனாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் தொடர்ந்து விளையாடுவார்கள் என்றும் அறிவித்தனர்.

சிறிய அணிகளுக்கு எதிராக இளம்வீரர்களை கொண்ட இந்திய அணியே ஒருநாள் போட்டிகளில் விளையாடி வெற்றி பெறுவதும் என்பதனால் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவிட வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றனர்.

- Advertisement -

ஆனால் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கௌதம் கம்பீர் விடுமுறையில் இருந்த அவர்கள் விளையாட வேண்டும் என்று இந்திய அணிக்குள் தேர்வு செய்து விட்டார். மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் : இந்திய அணியில் பும்ரா போன்ற முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நாங்கள் ஓய்வு அளிப்போம்.

ஏனெனில் அவர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும் என்பதால் அவர்களது பணிச்சுமையை கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடும்போது அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. பேட்ஸ்மேன்கள் அனைத்து தொடர்களிலும் பங்கேற்க வேண்டும்.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் இருந்து அவர்கள் ஓய்வு பெற்றதால் அனைத்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியிலும் பங்கேற்பார்கள். அவர்கள் இருவரிடமும் இன்னும் நிறைய கிரிக்கெட் மீதம் உள்ளது. எந்த ஒரு அணியிலும் அவர்கள் இருவரையும் நாம் ஆட வைக்கலாம். 2027 ஆம் ஆண்டு உலக கோப்பை நடைபெற உள்ளது அதில் அவர்கள் விளையாடுவார்கள் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : கம்பீரின் தலைமையில் கீழ் இணையவுள்ள 2 முக்கிய நபர்கள்.. பந்துவீச்சு பயிற்சியாளர் இவர்தான் – விவரம் இதோ

இதன் மூலம் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை அணியில் விட்டு நீக்கும் எண்ணம் இல்லை என்றாலும் அவர்கள் அடிக்கடி ஓய்வு எடுக்கக் கூடாது என்பதை மறைமுகமாக கம்பீர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் அடுத்த உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்றால் நிச்சயம் இவர்கள் தொடர்ந்து ஓய்வெடுக்காமல் விளையாட வேண்டியது அவசியம் என்பதையும் மறைமுகமாக அவர் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -