அவங்க 2 பேருக்கும் ரெஸ்ட்டே குடுத்திருக்கலாம்.. கம்பீர் மற்றும் அகார்கர் கெடுபிடியால் வீழ்ந்த – இந்திய அணி

Gambhir-and-Agarkar
- Advertisement -

இலங்கை அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை (0-2) என்ற கணக்கில் இழந்தது. கடந்த 1997-ஆம் ஆண்டுக்கு பிறகு 27 ஆண்டுகள் கழித்து இந்திய அணி இலங்கை அணியிடம் ஒருநாள் தொடரை இழந்து மோசமான நிலையை சந்தித்தது. இந்திய அணி சந்தித்த இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்த ஒருநாள் தொடரில் இப்படி இந்திய அணி மோசமான தோல்வியை சந்திக்க கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் தான் காரணம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் ரோஹித் சர்மாவை மீறி கம்பீர் தனது இஷ்டத்திற்கு ஏற்றாற்போல் அணியை தேர்வு செய்ததாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது.

- Advertisement -

அதேபோன்று அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற கையோடு இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவும், நட்சத்திர வீரரான விராட் கோலியும் டி20 வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர்.

அதோடு தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவோம் என்று தெரிவித்திருந்தனர். அதேபோன்று இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ஓய்வு வேண்டும் என்று கேட்டுக்கொண்ட இருவரும் தங்களது குடும்பத்தாருடன் விடுமுறைக்கு வெளிநாடு சென்றனர்.

- Advertisement -

ஆனால் அவர்களுக்கு ஓய்வளிக்கக்கூடாது என்று நினைத்த பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அகார்கர் ஆகியோர் வம்படியாக அவர்களை அழைத்து விளையாட வைத்தனர். ஆனால் தற்போது விளையாடும் மனநிலை இல்லாத அவர்கள் இருவரும் இருந்து இந்திய அணி தோல்வியை சந்தித்தது அவர்களுக்கும் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : 9 மாசம் முடிஞ்சும் அதை சமாளிச்சு ஜெயிக்கும் துணிச்சல் வரல.. இந்திய பேட்ஸ்மேன்களால் கேப்டன் ரோஹித் கவலை

மேலும் ஓய்வு கேட்ட சீனியர் வீரர்களான அவர்களுக்கு ஓய்வளித்து விட்டு வாய்ப்புக்காக காத்திருக்கும் இளம்வீரர்களை அணியில் தேர்வு செய்து அவர்கள் இருந்து இந்திய அணி தோற்றிருந்தால் கூட அது இந்திய அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்காது என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement