ராயுடுவை உலககோப்பை அணியில் எடுக்காததற்கு காரணம் இதுதான் – தேர்வாளர் மூலம் வெளியான உண்மை

Rayudu
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை நிச்சயம் கைப்பற்றும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் பலரும் கணித்திருந்தனர். மேலும் அந்த உலகக் கோப்பை தொடருக்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணி மிகத் தீவிரமாக தயாராகிறது. ஆனால் உலக கோப்பை தொடரின் லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி அரையிறுதி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த போட்டியின் தோல்விக்கு மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை காரணமாக அமைந்தது.

- Advertisement -

அதிலும் முக்கியமாக நான்காவது வரிசையில் நிரந்தர பேட்ஸ்மேன் இல்லாதது பெரிய குறையாக பார்க்கப்பட்டது. மேலும் உலக கோப்பை லீக் சுற்று முழுவதும் ரோகித், தவான், ராகுல், கோலி என டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். மிடில் ஆர்டரில் யாரும் பெரிதளவில் விளையாடவில்லை. இதனால் அரையிறுதிப் போட்டியில் விராட் கோலி, ரோகித், ராகுல் என மூவரும் சறுக்கலை சந்திக்க மிடில் ஆர்டர் ஆட்டம் கண்டது.

இந்திய அணியில் யுவராஜ் சிங் நான்காக வீரராக இருந்த வரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால் 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் அவர் ஓரங்கட்டப்பட்ட பிறகு அவருக்கு பதிலாக அந்த இடத்தில் அம்பத்தி ராயுடுவை 4-வது வீரராக இந்திய அணி நிர்வாகம் களமிறக்கியது. அவரும் அந்த வரிசையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி நம்பிக்கை அளித்தார். 2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை, ஆஸ்திரேலிய தொடர், நியூசிலாந்து தொடர் என அடுத்தடுத்த தொடர்களில் நான்காம் வரிசையில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடியதால் உலகக் கோப்பைக்கான அணியில் நான்காவதாக நிச்சயம் அவரே களமிறங்குவார் என கிட்டத்தட்ட உறுதியானது.

ஆனால் கடைசி கட்டத்தில் உலக கோப்பை தேர்வின்போது அவர் கழட்டி விடப்பட்டு அவருக்கு பதிலாக ஒரு சில போட்டிகளில் விளையாடிய விஜய் சங்கர் எடுக்கப்பட்டார். அவர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் சிறப்பாக செயல்படுவார் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது ராயுடுவிற்கும், ஷங்கருக்கும் இடையே பெரிய சர்ச்சை மற்றும் விவாதம் ஆகியவை சமூகவலைத்தளத்தில் துவங்கியது.

- Advertisement -

அதன்பின்னர் உலக கோப்பையில் ராயுடு புறக்கணிக்கப்பட்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது ராயுடுவின் புறக்கணிப்பு குறித்து தேர்வாளர் ககன் கவுடா ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் : ராய்டு அனுபவம் வாய்ந்த வீரர் உலக கோப்பையை கருத்தில் கொண்டு தான் அவருக்கு உலகக் கோப்பைக்கு முன்னதாக இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக வாய்ப்பு அளிக்கப்பட்டது.

rayudu

ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மந்தமாகி விட்டதாக உணர்ந்தோம். அவரது உறுதியும் நம்பிக்கையும் குறைந்தது அதனால் தான் அவரை எடுக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் ராய்டு தான் உலக கோப்பை தொடரில் விளையாட ஆர்வமாக இருந்ததாகவும், தன்னிடம் முழு திறமையை இருந்ததாகவும் தான் தேர்வு செய்யப்படாதது குறித்து வருத்தம் தெரிவித்தது மட்டுமின்றி திடீர் ஓய்வையும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது

Advertisement