இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் தற்போது கேப்டனாக இருந்து வருபவர் விராட் கோலி. தற்போது வரை இவர் பேட்ஸ்மேனாக பல சாதனைகளை படைத்து வந்தாலும் கேப்டன் பதவியில் அவ்வபோது தடுமாறி வருகிறார். சாதாரண தொடர்களில் அனைத்து தொடர்களையும் வெற்றி பெற்று அசத்தி வருகிறார் கோலி.

வேலைப்பளு அதிகமாகும் காரணத்தினால் முக்கியமான தொடர்களான ஐசிசி தொடர்களில் இறுதிப் போட்டியிலும், அரையிறுதிப் போட்டியில் தோற்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு பதிலாக ரோகித் சர்மாவை கேப்டன் ஆக்கலாம் என்று சில இந்திய வீரர்களின் கூறியுள்ளனர். அது குறித்து இந்த பதிவில் காண்போம்.
யுவராஜ்சிங் : ரோகித் சர்மாவின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர் யுவ்ராஜ் சிங். கடந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியில் ஆடியுள்ளார். அவர் கூறுகையில் : ரோகித் சர்மாவை கேப்டனாக மாற்றினால் விராட் கோலியின் வேலைப்பளு குறைவு. எனவே அவர் இன்னும் நிறைய சாதிக்க முடியும் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

மேலும் மும்பை அணிக்காக ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற்றது குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விவிஎஸ் லக்ஷ்மன் : இந்திய டெஸ்ட் அணியின் வலிமைமிக்க வீரரான இவர் 2018 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த ஒரு நிதாஸ் கோப்பையை ரோஹித் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியதை சுட்டிக் காண்பித்து ரோகித் சர்மாவை ஒருநாள் போட்டியிலும், டி20 போட்டியிலும் கேப்டனாக ஆகலாம் என்று கூறியுள்ளார்.
கௌதம் கம்பீர் : விராட் கோலி எப்பொழுதுமே ஆவேசமாக தனது சுபாவங்களை களத்தில் காண்பிப்பார். இது போன்ற சுபாவம் ஒருநாள் போட்டிகளுக்கு ஒத்து வராது என்பதால் அடுத்த கட்டத்திற்கு இந்திய அணியை கொண்டு செல்ல ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கலாம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர் : விராட் கோலியை விட ரோகித் சர்மா சிறந்த கேப்டனா என்று கேட்கலாம் அதற்கான பதிலை நான் கூறவில்லை. ஆனால் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மிக அருமையாக உள்ளது. அவர் அணியாக வீரர்களை அழைத்து செல்வது சிறப்பாக இருக்கிறது. மேலும் அவர் கேப்டனாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
கங்குலி : முன்னாள் இந்திய கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான அவரும் ஓபன் ஆக ரோகித் சர்மாவை கேப்டனாக வேண்டும் என்று கூறவில்லை என்றாலும் ரோகித் சர்மா நல்ல கேப்டனாக இருப்பார் என்று அடிக்கடி கூறி வந்தார். இந்தியாவின் துணை கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவிற்கு கேப்டனாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.



