இந்திய கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்..! பல அணிகளை வழி நடத்தியவர்..!

rajendira
- Advertisement -

பிரபல இந்திய டெஸ்ட் பந்துவீச்சாளர் ராஜேந்தர் பால் கடந்த புதன்கிழமை (மே 9 ) அன்று காலமானார். 80 வயதான அவர் டேராடூனில் அவரது வீட்டில் காலமானார் என்று அவரது சகோதரர் ரவீந்தர் பால் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

RAJINDER

- Advertisement -

ராஜேந்தர் பால், பிரபல கிரிக்கெட்டரான இவர் 1963 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். ஆனால் அந்த போட்டியில் 13 ஒவர்களை வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் திணறினார். இதனால் இவர் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியாக அமைந்து விட்டது. இதனால் அவர் மீண்டும் லோக்கல் போட்டிகளுக்கு திரும்பினார்.

தனது திறமையை நிரூபித்து காட்ட வேண்டும் என்று உத்வேகமாக தனது திறனை உள்நாட்டு தொடர்களில் நிரூபித்த ராஜேந்தர் பேல், 98 போட்டிகளில் 337 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 10 வருடங்கள் டெல்லி உள்நாட்டு அணியை வழிநடத்தி வந்தார். அதோடு பஞ்சாப், ஹரியானா போன்ற உள்நாட்டு அணிகளையும் இவர் தலைமை வழிநடாத்தி வந்தார்.

Rajinder-Pal

சில மாதங்களுக்கு முன்னர் டெல்லி கிரிக்கெட் சங்கம் நடத்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கூட்டத்தின் போது தான் இவரை அனைவருமே கண்டுள்ளனர். இவரது மறைவு டெல்லி கிரிக்கெட் வாரியத்திற்கு ஒரு மிகப்பெரிய இழப்புதான்.

Advertisement