சர்வேதச கிரிக்கெட் போட்டிகளின் அணைத்து தரப்பில் இருந்து ஒய்வு பெறுவதாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் பரவிந்தர் அவான அறிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக 9 ஆண்டுகள் விளையாடியுள்ள இவர், இந்திய அணியில் இரண்டு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
2007 – 2016 ஆம் ஆண்டு வரை டெல்லி அணியில் உள்ளூர் போட்டிகளில் விளையாடிவந்த பரவிந்தர் அவான, இதுவரை 62 முதல் ரக கிரிக்கெட் போட்டிகளிலும், 42 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2012-2014 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடி வந்த இவர், 33 போட்டிகளில் விளையாடி 39 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
சமீபத்தில் தனது ஒய்வு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பரவிந்தர் அவான “எனது செங்கோலை தற்போது இளம் வீரர்களுக்கு அளிக்க இது ஒரு சிறந்த நேரம் என்று நினைக்கிறேன். எனது திறமையை நிரூபிக்க வாய்ப்பளித்த டெல்லி கிரிக்கெட் வாரிய தேர்வாளர்களுக்கும் எனது முன்னாள் வீரர்களுக்கும், எனது கிரிக்கெட் வாழ்வில் உறுதுணையாக இருந்தவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ” என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
There comes a time when all good things come to an end. I would like to thank everyone who have been part of my cricketing journey and supported me at all times. ???? pic.twitter.com/wQf9U41lx8
— Parvinder Awana (@ParvinderAwana) July 17, 2018
சர்வதேச இந்திய அணிக்காக வெறும் இரண்டு டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள பரவிந்தர் அவான , இரண்டு போட்டிகளிலும் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒன்று. அதன் பின்னர் இவருக்கு இந்தியா அணியில் விளையாடும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதனால் தற்போது தனது 32 வயதிலேயே கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒவ்யு பெற்றுள்ளார்.