கவுண்ட்டி கிரிக்கெட்டில் கோலி விளையாட கூடாது…மீறினால் இதுதான் நடக்கும் ! பாப் வில்லிஸ்

Bob-wills
- Advertisement -

முன்னாள் இங்கிலாந்து வீரரும் சிறந்த ஆட்டக்காரருமான பாப் வில்லிஸ், இந்திய அணி கேப்டன் விராட்கோலி இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் கலந்து கொண்டு விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.வரும் ஜூலை மாதத்தில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20/20 மற்றும் மூன்று சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும், ஆகஸ்ட் மாதத்தில் 5 டெஸ்ட் தொடர்களிலும் விளையாடவுள்ளது.

BobWillis

- Advertisement -

அதற்கு முன்னதாக இங்கிலாந்தில் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக விராட்கோலி ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் முன்னாள் இங்கிலாந்து கேப்டன்களில் ஒருவரான பாப் வில்லீஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் “இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றார்.மேலும் பேசிய அவர் “கோலி போன்ற வெளிநாட்டு வீரர்கள் இங்கிலாந்திற்கு வந்து கவுண்டி போட்டிகளில் விளையாடினால் இங்கிருக்கும் இளம் வீரர்களுக்கான வாய்ப்பு பறிபோய்விடும்.

kolhi

கவுண்டி போட்டிகளில் இளம் உள்நாட்டு வீரர்களுக்கே வாய்ப்பளித்து அவர்களுக்கான பயிற்சியை அளித்து சிறந்த வீரர்களை உருவாக்கிட வேண்டும்.ஜூலை மாதத்தில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில் ஜூன் மாதம் விராட்கோலியை இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் விளையாட வைப்பது அவ்வளவு சரியானதல்ல. விராட்கோலி நம்முடைய பிட்ச்சை கணித்து ஆடுவதற்கான வாய்ப்பை நாமே ஏற்படுத்தி தந்து தொடரை இழக்கும் வாய்ப்பாக கூட அமைந்துவிடும் என்று பேசினார்.

Advertisement