அடடா நேற்றைய போட்டியில் இதை கவனிச்சீங்களா ? டி20 போட்டியில் நடந்த அறிய சாதனை – விவரம் இதோ

Iyer-3
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் என இரு அணி பேட்ஸ்மேன்களும் இணைந்து ஒரு புதிய சாதனை ஒன்றை அரங்கேற்றியுள்ளனர்.

Williamson

அதன்படி நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவிக்க அதன் பின்னர் அந்த இலக்கை துரத்திய இந்திய அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இந்த மைதானம் சிறய மைதானம் என்பதால் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் அசால்டாக அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதன்படி நேற்று நடந்த டி20 போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி சார்பாக முன்ரோ 59 ரன்களும், வில்லியம்சன் 51 ரன்களையும், ராஸ் டைலர் 54 ரன்களையும் அடித்தனர். அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியில் ராகுல் 56 மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் 58 ஆகிய இருவரும் அரைசதம் கடந்தனர்.

இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் 5 பேட்ஸ்மேன்கள் இணைந்து அரைசதம் அடித்து இதுவே முதல்முறை என்ற அறிய சாதனையை இரு அணி வீரர்களும் இணைந்து நிகழ்த்தியுள்ளனர். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஆக்லாந்தில் நடைபெற இருக்கிறது.

Advertisement