முதல் ஒருநாள் போட்டி : நாளைக்கு எத்தனை மணிக்கு ஆரம்பம் ? எந்த சேனலில் பார்க்கலாம் – முழுவிவரம் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது ஜூலை 13ஆம் தேதி துவங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பிய இலங்கை அணியில் சில நபர்களுக்கு கொரோனா உறுதியானதன் காரணமாக இந்த போட்டி அட்டவணை சற்று மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி ஜூலை 18 ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது 29ஆம் தேதி முடிவடையும் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Sl

- Advertisement -

இந்நிலையில் தற்போது மாற்றி அமைக்கப்பட்ட இந்த போட்டி தேதிகள் மற்றும் போட்டி எந்த நேரத்தில் தொடங்கும் ? எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ? என்று பல சந்தேகங்கள் ரசிகர்களுக்கு இருக்கலாம். அதனை தெளிவுபடுத்தும் விதமாக நாங்கள் உங்களுக்கு இந்தியா இலங்கை தொடருக்கான முழுமையான ஒரு விளக்கத்தை இங்கு கொடுத்துள்ளோம். அதன்படி இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற ஜூலை 18-ஆம் தேதி துவங்குகிறது.

அதன்பின்னர் இரண்டாவது ஒருநாள் போட்டி 20ஆம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி 23ஆம் தேதியும் துவங்குகின்றன. ஒருநாள் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு துவங்குகிறது. அதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது 25ஆம் தேதி முதல் துவங்குகிறது. 25ஆம் தேதி நடைபெறும் முதல் டி20 போட்டியை அடுத்து 27ஆம் தேதி 2வது டி20 போட்டியும், 29ஆம் தேதி 3-வது டி20 போட்டியும் நடைபெறவுள்ளன.

INDvsSL

ஒருநாள் போட்டிகள் மதியம் 3 மணிக்கு துவங்குகின்றன. அதேவேளையில் டி20 போட்டிகளானது இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனைத்தும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. அதையும் நாங்கள் மேலே உங்களுக்காக தொகுத்துள்ளோம்.

sony

அதன்படி மாற்றி அமைக்கப்பட்ட இந்த அட்டவணையின் படி இந்த இந்தியா-இலங்கை தொடரானது 18ஆம் தேதி துவங்கி 29ம் தேதி முடிவடையும் என்றும் இந்தப் போட்டிகள் அனைத்துமே சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மொபைலில் சோனி லைவ் ஆப் மூலம் போட்டிகளை காணலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement