சில சமயம் இவரை தடுத்து நிறுத்த முடியாது. அதனாலே இந்தியாவை எளிதில் வீழ்த்தினோம் – பின்ச் புகழாரம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ஷிகர் தவான் 74 ரன்கள் குவித்தார்.

Rahul

அதனைத் தொடர்ந்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சாளர்களை விளாசி 37.4 ஓவர்களில் 258 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் வீரர்களான வார்னர் 128 ரன்களும், பின்ச் 110 ரன்களும் குவித்தனர். ஆட்டநாயகனாக வார்னர் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் கூறியதாவது : மிடில் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக மீண்டு வந்தோம் என்று நினைக்கிறேன். ஏனெனில் ராகுல் மற்றும் தவான் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள் அவர்கள் ரன் குவிப்பை அதிகப்படுத்தி விளையாடினார்கள். எங்களுடைய பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் பெருமையாக இருக்கிறது. இருப்பினும் பில்டிங்கில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மொத்தத்தில் இது ஒரு நல்ல போட்டி.

aus

எப்பொழுதும் இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்துவது என்பது கடினமான விடயம் ஆனால் தற்போது வார்னர் சிறப்பான பார்மில் உள்ளார். இந்த வடிவத்தில் அவருடைய ஆட்டம் எப்போதும் தடுக்க முடியாத அளவிற்கு சில சமயம் இருக்கும் அந்த ஆட்டம் இன்று வெளியானது. அவர் ரன் குவிக்க ஏகப்பட்ட ஆப்ஷன்கள் இருந்தது. எப்போதும் அவருடன் பேட்டிங் செய்வது சிறப்பான ஒன்றாகும். அதேசமயம் இந்திய அணி தரமான அணி தோல்வியிலிருந்து அவர்கள் மீண்டு வரவும் முடியும் என்று பின்ச் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -