ஆஸ்திரேலிய மக்களின் கண்ணீரை துடைக்க இதை செய்தே ஆகவேண்டும் – பின்ச் சபதம்

- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி பின்ச் தலைமையில் ஏற்கனவே இந்தியாவிற்கு வந்து அடைந்தது. நாளை இவ்விரு அணிகளுக்கும் இடையே முதல் போட்டி மும்பை மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

Finch

- Advertisement -

இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மும்பையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அரபின்ஸ்ஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். மேலும் அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது சாதாரணமான விடயம் கிடையாது.

இந்த தொடரில் இந்திய அணியை வீழ்த்துவது என்பது ஒரு சிரமமான காரியம்தான் இருப்பினும் கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நாங்கள் கைப்பற்றினோம். எனவே அதே போன்று சிறப்பான ஆட்டத்தை இந்த தொடரிலும் வெளிப்படுத்த தயாராக இருக்கிறோம். ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் ஏற்பட்ட பாதிப்பினால் மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

aus

அந்த காட்டு தீயால் ஏற்பட்ட சோகத்தை மீட்டு அவர்களின் முகத்தில் புன்னகையை பார்ப்பதற்காக இந்த தொடரை வென்று காட்டுவோம் என்று கூறினார். ஆஸ்திரேலிய அணி கடந்து 2019ஆம் ஆண்டு இந்தியாவில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அந்த தொடரை 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணி இந்த கோப்பையை வெல்லும் முனைப்போடு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement