இது நடந்திருந்த நாங்க ஜெயிச்சிருப்போம். நாங்க பண்ண மிஸ்டேக் இதுதான் – பின்ச் வருத்தம்

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 286 ரன்களை குவித்தது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Ind-vs-aus-1

- Advertisement -

அதன்பிறகு 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஹித் 119 ரன்களையும், கோலி 89 ரன்களையும் குவித்தனர். ஆட்டநாயகனாக ரோஹித்தும், தொடர் நாயகனாக கோலியும் அறிவிக்கப்பட்டனர்.

போட்டி முடிந்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் கூறியதாவது : இந்த மைதானம் ஆரம்பத்திலிருந்தே சிறிதளவு ஸ்பின் ஆனது. எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த போட்டியில் சற்று சிறப்பாக செயல்படவில்லை. மேலும் 310 ரன்கள் அடித்து இருந்தால் எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு மிடில் ஓவர்களில் பிரஷர் கொடுத்து இருக்க முடியும். நாங்கள் வெற்றிக்கு தேவையான ரன்களை குவிக்கவில்லை.

Rohith-2

அதேபோன்று நாங்கள் பேட்டிங் செய்யும்போது ஒவ்வொரு கட்டத்திலும் சில விக்கெட்டுகளை இழந்தோம். அது எங்களது ஆதிக்கத்தை குறைத்தது. இருப்பினும் உலகத்தின் மிகச் சிறந்த அணியான இந்திய அணியை அதன் சொந்த சூழ்நிலையில் எதிர்கொள்வது எவ்வாறு என்பதை கற்றுக்கொள்ள இந்த தொடர் ஒரு பாடமாக அமைந்தது.

Ind-2

அகர் சிறப்பாக பந்து வீசினார். இதுபோன்ற உலகின் மிகச்சிறந்த வீரர்களுக்கு எதிராக பந்துவீசும் போது அது உங்களுக்கு நிறைய கற்றுத் தரும் பகுதிநேர பந்துவீச்சாளர்களை சில ஓவர்கள் வீச வைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அது போன்ற தவறு இனி நடக்கக் கூடாது மொத்தத்தில் இந்த தொடர் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது என்று வருத்தத்துடன் பின்ச் பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement