இவர்கள் இருவரும் இருந்திருந்தால் ஜெயிச்சி இருப்போம். ஜஸ்ட் மிஸ் – பின்ச் பேட்டி

finch1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 340 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ஷிகர் தவன் 96 ரன்களையும், இறுதிநேரத்தில் அதிரடியாக விளையாடிய ராகுல் 80 ரன்களை குவித்தனர்.

dhawan 3

அதன்பிறகு 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவர்களில் 304 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற நிலையில் சமன்செய்து உள்ளது. ஸ்மித் 98 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி சார்பில் ஷமி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா தவிர மற்ற அனைவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

- Advertisement -

இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பின்ச் கூறியதாவது : இந்த அளவுக்கு குளிரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. லாங் ஸ்லீவ் ஸ்வெட்டர் வேண்டும் என்று நினைக்கிறேன். எங்களது பந்து வீச்சு சிறப்பாக இருந்தாலும் சரியான நேரத்தில் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. சாம்பா சிறப்பாக வீசினார். ஸ்மித் இன்று விளையாடிய விதம் மிக அருமையாக இருந்தது. லாபுஷேன் மற்றும் ஸ்மித் போட்டியை கிட்டத்தட்ட இறுதிவரை கொண்டு சென்றார்கள்.

Smith

அவர்கள் விக்கெட் விழுந்த பின்னர் ஆட்டம் கையை விட்டுச் சென்றது. மேலும் இதுபோன்ற மைதானங்களில் பேட்ஸ்மேன்கள் நின்று ஆட முடியும். சேசிங் போதும் சரியான அளவிலேயே நாங்கள் துரத்தி வந்தோம். ஆனால் ஒரு கட்டத்தில் விக்கெட்டுகள் விழ ரன்ரேட் அதிகமாகி இந்த தோல்வி ஏற்பட்டது இதிலிருந்து அடுத்த போட்டியில் பலமாக வருவோம் என்று பின்ச் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement