முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் நாங்கள் தோற்க இவர்களே காரணம் – ஆஸி கேப்டன் பின்ச் வெளிப்படை

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் அதிகபட்சமாக துவக்க வீரர் மேத்யூ வேட் 80 ரன்களும், மேக்ஸ்வெல் 54 ரன்கள் குவித்தனர். அதன்பின்னர் 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 174 ரன்கள் மட்டுமே குவித்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மட்டும் 61 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரி என தனி ஒரு ஆளாக 85 ரன்கள் குவித்து வெற்றிக்காக போராடினார்.

- Advertisement -

இருப்பினும் இறுதி நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ இந்திய அணியால் இலக்கினை எட்ட முடியவில்லை. அதன் காரணமாக இந்திய அணி கடைசி போட்டியில் தோல்வியடைந்தது இருப்பினும் ஏற்கனவே இத்தொடரின் முதல் இரு போட்டிகளில் கைப்பற்றியதால் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. அதுமட்டுமின்றி இந்த தொடருக்கான தொடர் நாயகன் விருதினை இந்திய அணியின் அதிரடி வீரரான ஹர்திக் பாண்டியாவிற்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் கூறுகையில் : இந்த தொடர் ஒரு சிறப்பான தொடராகும். முதல் இரு போட்டிகளிலும் நாங்கள் கடைசி நேரத்தில் செய்த தவறுகளே போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு காரணம். துவக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் இறுதிநேரத்தில் ரன்களை குவிக்க தவறிவிட்டோம். இந்திய அணியின் வீரர்கள் பின்வரிசையில் சிறப்பாக பந்துவீசி எங்கள் அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். கடந்த இரண்டு போட்டியிலும் இறுதி நேரத்தில் எங்களால் அதிக ரன்களை குவிக்க முடியவில்லை.

nattu

சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய பவுலர்களே முதல் 2 போட்டிகளிலும் எங்களது தோல்விக்கு காரணம். இந்த முறை தான் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியில் இரண்டு லெக்ஸ் ஸ்பின்னர்களை வைத்து விளையாடுகிறோம். இருவருமே சிறப்பாக பந்து வீசினர் குறிப்பாக ஸ்வெப்னன் இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசினார். அதுமட்டுமின்றி ஆடம் ஜாம்பாவும் மிகச் சிறப்பாகவே பந்து வீச்சினை வெளிப்படுத்தினார். ஒட்டுமொத்தத்தில் இந்த தொடர் 18 மாதங்களுக்கு பிறகு ஒரு திருப்தியான தொடராக அமைந்தது என்று பின்ச் கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறும் இருக்கிறது. இந்த தொடரில் டிம் பெயின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், விராட் கோலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement